வெள்ளி, 29 மார்ச், 2019

அதிமுக ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங்க கம்பனி ?.. கட்சிகளால் கம்பனிகளை வெல்லமுடியுமா?

அரசியல் கட்சிகள் ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் அமைப்பாக இயங்கினால் அதை தோற்கடிப்பது மிகவும் கடினம்.
ஏனெனில் அந்த மல்டி லெவல் மார்கெட்டிங் நிறுவனம் அதில் பங்கு பற்றும் எல்லோருக்கும் ஒரு கமிஷன் இலாபம் தரும் அமைப்பாக இருப்பதால் அதில் ஈடுபட்டுள்ள பங்காளிகள் மிகவும் சிரத்தையோடு கருமமே கண்ணாக இருப்பார் . அவர்களுக்குதான் அதில் உடனடி வருமானம் கிடைக்குமே?
மாறாக அரசியல் கட்சிகள் மீது கொள்கை அடிப்படைலான ஆதரவாளர்களாக இருப்போர் ஒரு வகையான பகுதிநேர வேலை போன்றுதான் தங்கள் அரசியல கவனிப்பார்கள்.
அதுதான் அவர்களது குடும்பத்தை தாங்கி பிடிக்கும் வருமான வழியல்லவே?
இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் சிஸ்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வைத்த பெருமை மறைந்த முதல்வர் எம்ஜி ஆரையே சாரும்.
அவர் தன்னோடு ரசிகர் மன்றத்தில் இருந்த ஏறக்குறைய அத்தனை பேரையும் ஏதாவது பதவியும் கொடுத்து அது மட்டுமல்லாமல் வியாபர காண்ட்ராக்ட் போன்றவற்றையும் கொடுத்து ஒரு அரசியல் வர்த்தக முதலாளிகளை உருவாக்கி விட்டிருந்தார் .

எம்ஜியார் தனது ரசிகர் மன்றத்து அடியாட்களை அரசியலிலும் பின்பு அவர்களுகு உருவாக்கி கொடுத்த சுய நிதி கல்வி நிறுவனங்களும் கொஞ்ச நஞ்சமா? 
ஜேப்பியார் , சாராய உடையார். விஸ்வநாதன் .எ சி சண்முகம் ,.. இன்னபிற  

பின்னால் வந்த ஜெயலலிதாவுக்கு இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பனி அரசியல் மிகவும் வசதியாக அமைந்து விட்டது.
ஜெயலலிதாவுக்கு பின்பு வந்த பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தினகரன் போன்றோருக்கு இடையில் உள்ள பிரச்சனைகள் எல்லாம்  பங்கு பிரிப்பதில் உள்ள சண்டை மட்டும்தான் 

அந்த மல்டி லெவல் மார்கெட்டிங் கம்பனியில் உள்ள கமிஷன் இலாபம் போன்றவற்றின்அடுத்த கட்ட உரிமையாளர்கள் யார் யார் என்பதில் அவர்கள்போட்டி இடுவது சர்வசாதரணமாக எல்லா மாபியாக்களிலும் , எல்லா மல்டி லெவல் மார்கெட்டிங் கம்பனிகளிலும் நடப்பதுதான்.
இந்த பங்கு பிரிக்கும் சண்டை தனிப்பட்ட கொலைகளில் முடிவதுகூட அதிசயம் இல்லை. ஏனெனில் அதில் அவர்களுக்கு கிடைத்து வரும் கொழுத்த வருமானம் அவர்களை எந்த தவறும் செய்ய தூண்டும்.
அதிமுகவும் தற்போதைய பாஜகவும் கூட இப்படிப்பட்ட ஒரு மல்டி லெவல் மார்கேட்டிங்காகத்தான் இயங்குகிறது.
இதில் உள்ள ஏஜெண்டுகள் எந்த பொய்யும் கூற தயங்கமாட்டார்கள் . பொய்கள்தனே அவர்களின் மூலதனம்?
சாதாரண அரசியல் கட்சிகள் இந்த மல்டி லெவல் மார்கெட்டிங் கட்சிகளை அல்லது அமைப்புக்களை / இயக்கங்களை வெல்வது இலகுவல்ல.
திமுக எவ்வளவு நன்மை செய்தாலும் அதை மறுத்து மக்களை பொய்களை நம்புமாறு செய்வதற்கு இந்த மல்டி லெவல் மார்கெட்டிங் கட்சிகளால் முடியும். 
இதை முறியடிக்க ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அமைப்புக்கள் எல்லாம் ஒரு போர்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக