புதன், 13 மார்ச், 2019

விபச்சாரத்தை ஆரம்பிங்கடா, என்ன கலாச்சாரம்..வெங்காயம்: ஒரு நடிகையின் ஆவேசம் வீடியோ


வெப்துனியா: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பல திரையுலகினர் தங்களுடைய ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை சிந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வணக்கங்க.. நான் ஒன்னும் புதுசா பேச போறது இல்லை. அந்த காலம் மாதிரி இந்த காலம் கிடையாதுங்க. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நமக்கென்னன்னு சும்மா போக முடியலங்க. நம்மால முடிஞ்சது எதிர்த்து குரல்தான் தர முடியும்?
வேறென்னங்க பண்ண முடியும்?  மிருக நாய்ங்க.. இன்னும் கேவலமாக கூட அவங்களை பேசலாம். அவனுங்கள பேசி நான் இமேஜ் கம்மி பண்ணிக்க முடியாது.  4 வயசு குழந்தைங்கள கூட ரேப் பண்றானுங்க. இவனுங்க உயிரோட இருக்கணுமா?
அப்ராட் போயி பாருங்க. ஒரு பொண்ணை ரேப் பண்ணா நடுரோட்டில வெச்சு துண்டு துண்டா வெட்றாங்க.
இந்த மாதிரி இந்தியாவுல ஏன் சட்டத்தை கொண்டு வர மாட்டேன்றீங்க? பம்பாயில விபச்சாரமே நடக்குது.. அங்க இந்த மாதிரி ரேப் நடக்குதா? இங்க மட்டும் பாருங்க...
ஏதாவது ஒரு மூலையில பொண்ணு கற்பழிக்கப்படறது நடக்குது. இந்த மாதிரி சட்டத்தை இங்க கொண்டு வந்து தொலைங்களேன்.
என்ன கல்ச்சர், என்ன வெங்காயம்னு பார்த்துட்டு இருக்கீங்க. அந்த மாதிரி கர்மத்தை சட்டப்படி கொண்டு வந்தா, இந்த மாதிரி நாய்ங்களோட வெறியாவது கம்மியாகும் இல்லை?

இருக்கிற பொண்ணுங்களாவது தப்பிப்பாங்க இல்லை? இந்த பொண்ணுங்க மேலயும் தப்பு இருக்குங்க. வளர்த்து ஆளாக்கி ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி தரணுமேன்னு பெத்தவங்களுக்கு தெரியாதா?
பொண்ணுங்களுக்கும் எங்க அறிவு போச்சு? எவனோ ஒரு எச்சக்கல நாயி கூப்பிடறான்னு சொல்லிட்டு, இங்கிருந்து அவன்கூட போலாமா?
தப்பு பண்ற பொண்ணுங்க இந்த மாதிரி நியூஸாவது பார்த்து திருந்துங்கடி. இன்னைக்கு உங்க வாழ்க்கையே தொலைச்சிட்டு மீடியாவுல நாறிக்கிட்டு இருக்கீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்க. ஒரு வாரம் இந்த பொள்ளாச்சி நியூஸ் பரபரப்பா போகும். அப்பறம் நமக்கென்னான்னு தூக்கி போட்டுருவாங்க.
இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வாங்க. எந்த ஊர்ல விபச்சாரம் நடக்கல? பாம்பேல நடக்கல? ஆந்திராவில நடக்கல? ஏன் இங்க கொண்டு வர மாட்டேன்றீங்க? தயவு செய்து கொண்டு வாங்க. வயசானவங்கள கூட விட்டு வைக்க மாட்டானுங்க. பெட்ரோல ஊத்தி இவனுங்கள சாகடிங்க" இவ்வாறு ஆவேசமாக நடிகை சிந்து வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக