ஞாயிறு, 3 மார்ச், 2019

சன் குழுமம், திமுகவின் தொலைக்காட்சி நிறுவனம் அல்ல?

கருஞ்சட்டை தமிழன் : கலைஞரால் தன் வாழ்வில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது என்ற எண்ணும் பலர் அவருக்காக எதையும் செய்ய உள்ளார்கள். அவர்கள் திமுகவுக்கு எதிராக எப்போதும் வாக்களிக்கமாட்டார்கள்.
ஆனால் சன் குழுமமோ தன் சொந்த லாபத்திற்காக, திமுகவுக்கு எதிரானது மட்டுமல்ல, நாட்டின் நலத்திற்கும் எதிரான பாஜகவின் பிரச்சார விளம்பரங்களை ஒலிபரப்பு செய்கிறது.
நான் மேலே சொன்ன நபர்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும், திமுகவுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள், அதற்கு காரணம் கழக ஆட்சியில் அவர்கள் அடைந்த ஏதேனும் வளர்ச்சி திட்டம் காரணமாக இருக்கலாம். அந்த உணர்வில் நூறில் ஓர் பங்குகூட இல்லாத சன் குழுமம், திமுகவின் தொலைக்காட்சி நிறுவனமாக இருக்க வாய்ப்பேயில்லை. ஆக இனி சன்டிவியை திமுகவுடன் பின் அடிக்காதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக