புதன், 13 மார்ச், 2019

நக்கீரன் கோபால் .. தமிழகத்தின் நாலாவது தூண்!

டான் அசோக் : நக்கீரன் கோபால் அண்ணனின் காணொளியை
இப்போதுதான் பார்த்தேன். பதற்றத்தில் அவர் கைகள் நடுங்குகிறது. கோபம் அவர் குரலில், வார்த்தைகளில் வெளிப்படுகிறது. நக்கீரனும் இல்லை என்றால் தமிழ்நாடு நக்கிக்கொண்டு தான் போகும்.
அரசியலைச் சுத்தப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என பேசுகிறோம், பேச வைக்கப்படுகிறோம். நம் மொத்த கவனமும் அரசியல் மீதுதான் குவிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது இந்திய/தமிழக ஊடகங்கள்தான். ஊடகங்கள் எல்லாம் நக்கீரன் போல ஆகும்வரை இங்கே முதல்வர் மரணம் கூட மர்மமாக இருக்கும், 
ரஃபேல் ஊழல் 'தி இந்து'வில் மட்டுமே கரை ஒதுங்கும், 
சமாதியில் நடந்த தர்மயுத்தங்கள் மறக்கப்படும், கொடநாட்டுக் கொலைகள் காணாமல் போகும், 
ஸ்டெர்லைட் கொலைகள் நீர்த்துப்போகும், மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள வைரங்கள் மறையும்,

 "ரோட்டுக்கு வா பேசிக்கலாம்" அமைச்சர்கள் சிரித்தபடி வலம் வருவார்கள், நிர்மலாதேவி மறைந்தே போவார், கவர்னர் பழைய மிடுக்கோடு ஊர்வலம் போவார், பொள்ளாச்சி பயங்கரங்கள் கூட கடைசிப்பக்கத்தில் பெட்டிச் செய்தியாய் ஒதுங்கும். இங்கே எவனுக்கும் பயம் இல்லை. ஏனெனில், தப்பு செய்தால் மக்களிடம் கொண்டு சொல்வார்கள், மக்களால், நீதியால் தண்டிக்கப்படுவோம் என்கிற பயத்தை ஏற்படுத்த இங்கே எவனும் இல்லை. எவனுமே இல்லை. நக்கீரனையும், சமூக ஊடகங்களில் ஒரு 30% தவிர!!

பழனிவேல் மாணிக்கம் :அரசியல் ஒரு சாக்கடை,அரசியல்வாதிகள் அத்தனைபேரும் மோசமானவர்கள்,அரசியல்வாதிகளால் தான் இந்த நாடு சீரழிந்துவிட்டது,அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்,அவர்களுக்கு ஓட்டுப்போடுவதைவிட நோட்டாவிற்கு போடுங்கள் என வருடம் முழுவதும் கூவிவிட்டு,
அவர்களுக்கு யார் ஆண்டால் நன்மையோ அந்த அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நாளன்று தவறாமல் போய் வரிசையில் முதல் ஆளாய் நின்று வாக்களித்துவிட்டு மீண்டும் அரசியல் சாக்கடை குப்பை .......என கூவ துவங்கும் ஒரு கும்பல்....
அந்த கும்பல்தான் இப்போது வேறுவிதமாக பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு கொடூரங்களை அரசியலாக்காதீர்கள் என்ற கூவலையும் தொடங்கியுள்ளது.இது அதனை செய்த கொடூர குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஒரு பகுதியே அந்த கூவல்......
இங்கு அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. ஹிட்லரின் கொடூரங்களை தன் திரைப்படத்தின் வழியாக அந்த அரசியலை பேசி உலகின் கவனத்தை கவர்ந்தார் சார்லி சாப்ளின் எனும் மகத்தான மானுடநேயன்...
உங்கள் தாயின் கருவில் நீங்கள் உரு கொள்ள தொடங்குபோதே தொடங்கிவிடுகிறது உங்களுக்கான அரசியல்.
ஆண்டை மனநிலையுடன் கூடிய வக்கிரமும்,அதிகார வர்க்கமும் கைகோர்ப்பது என்பதின் உச்சநிலை கொடூரத்திற்கு நேரடி எடுத்துக்காட்டு பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு ....

இந்த ஒட்டுமொத்த பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட முதல் மற்றும் கடைசி குற்றவாளி வரை கைது செய்யப்பட்டு உரிய கடும் தண்டனையை பெற்று தரவேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக இருக்கும்...
நேற்று ஒரு பொள்ளாச்சி அரசியல் முக்கிய புள்ளி இதனை நான்தான் முதலில் காவல்துறை கவனத்துக்கு கொண்டு சென்றேன் என அவசர அவசரமாக இரவில் பேட்டி தருகிறார்,எப்போது? தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை மற்றும் இரண்டு ஊடகங்கள் இதனை எதற்கும் அஞ்சாமல் வெளிகொணர்ந்தவுடன் தான் இது நடக்கிறது...

இப்போதெல்லாம் பல கொலை வழக்குகளில் வழக்கை காவல்துறை கவனத்திற்கு முதலில் கொண்டு செல்லும் கணவனோ,மனைவியோ தான் பின்னர் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார்கள் என்பதையும் நாம் இப்போது பார்க்கிறோம்....
இந்த வழக்கை திசைதிருப்ப பல 'Take Diversion' வேலைகளை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கூட்டம் குறைந்த அளவு மனசாட்சி கூட இன்றி செய்ய பார்க்கும்,பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.சமூக அக்கறையுள்ளவர்கள் இதனை விடாது பின்தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்பதே இந்த வழக்கு உயிர்ப்புடன் இருக்க வழி,இல்லையெனில் தோழர் முகிலனை போல என்றாவது ஒருநாள் இவ்வழக்கும் காணாமல் போக வாய்ப்புக்கள் ஏராளம் ஏராளம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக