ஞாயிறு, 24 மார்ச், 2019

நடிகை ரோஜா : என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் ‘சந்திரபாபு நாயுடுவையே போட்டியாக நினைக்கிறேன்

மாலைமலர் : வெப்துனியா : என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான்
போட்டியாக நினைப்பது சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் லோகே‌‌ஷ் ஆகியோரை தான் என நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி:< ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் நிருபர்களிடம் நடிகை ரோஜா கூறுகையில், ‘என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான் போட்டியாக நினைப்பது சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் லோகே‌‌ஷ்
ஆகியோரைத்தான்.

10 ஆண்டுகள் சந்திரபாபுநாயுடுவை ஒரு சகோதரனாக நினைத்து தெலுங்குதேசம் கட்சிக்காக உழைத்தேன். அவர் 2 முறை நகரி, சந்திரகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். ஆனால் தனது கட்சிக்காரர்களை கொண்டே அவர் என்னை தோற்கடித்தார். செய்யாத குற்றத்துக்காக என்னை சட்டமன்றத்தில் இருந்து ஒரு வருடம் இடைநீக்கம் செய்தார்கள். ஜெகன்மோகன் ரெட்டியை முதல்-மந்திரியாக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்’ என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக