வியாழன், 21 மார்ச், 2019

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்

தினமலர் :கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.
அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜின் உடல், அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல் கனகராஜ் மறைவுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கனகராஜ் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக