வெள்ளி, 15 மார்ச், 2019

பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவுமாலைமலர் : புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
பாரிஸ்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம்தான் காரணம் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில், பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனாக இருக்கும் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக