புதன், 27 மார்ச், 2019

. ஓஎஸ்.மணியன் : வாட்சாப்.. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தடை செய்ய வேண்டும் ...

தினகரன்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், பதிவுகள் ஆகியவை நம்பகத்தன்மை இல்லாதது. அதை பற்றியெல்லாம் பதில் கூற முடியாது. இதை தடை செய்ய வேண்டும். இதை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. இந்த சமூக வலைதளங்களை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இதுகுறித்து பரிசீலனை செய்யவும் முறையிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக