ஞாயிறு, 24 மார்ச், 2019

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி ! சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்

ராஜசேகரன் எம்.எல்.ஏசிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் நீண்ட இழுபறிக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளார். 
vikatan.com - பாலமுருகன். தெ : சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கட்சித் தொண்டர்கள் எல்லாம் எம்.எல்.ஏ ராமசாமியை வேட்பாளராக அறிவிக்கச்சொல்லி காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தொண்டர்கள் ஃபேக்ஸ் அனுப்பிவருகிறார்கள். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்துத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மேலிடம் நேற்றிரவு ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.  அந்தத் தொகுதி பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் யார் வேட்பாளர் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிவகங்கை தொகுதிக்கு ப.சிதம்பரம் தன்னுடைய மகனுக்கு சீட் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அதே நேரத்தில் சிவகங்கை தொகுதி சிதம்பரம் குடும்பத்திற்குத் தொடர்ந்து கொடுத்தால் காங்கிரஸ் கட்சி என்ன சிதம்பரம் குடும்பச் சொத்தா என்கிற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. சிதம்பரம் குடும்பத்தினர் மீது ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதையே காரணம் காட்டி சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் தலைமையிடம் சண்டையிட்டு வருகிறார்.


உளவுத்துறை ரிப்போர்ட் படி கார்த்திக் சிதம்பரத்திற்கு தொகுதிக்குள் நல்ல பெயர் இல்லையென்றும் அதையும் மீறி அவரை வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே வாக்குகளை மாற்றிப்போடுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். சிதம்பரத்தைக்கூட மக்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆனால் கார்த்திக் சிதம்பரத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுதான் தொகுதியில் இருக்கும் சூழ்நிலை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம். இதையெல்லாம் கையில் வைத்துக்கொண்டுதான் ராகுல்காந்தி கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க முடியாது என்று கறாராக இருக்கிறாராம்.
காங்கிரஸ் தலைமை எப்படி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வைத்தியலிங்கத்தை அவரது பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி எப்படி வேட்பாளராக அறிவித்திருக்கிறதோ, அதே போன்று காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ ராமசாமியை ராஜினாமா செய்யவைத்து விட்டு அவரை சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்துங்கள் என்று கட்சித் தொண்டர்கள் தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்கள்.  ராமசாமியை வேட்பாளராக நிறுத்தினால் எந்தச் சிரமமும் இல்லாமல் காங்கிரஸ் சிவகங்கை தொகுதியைக் கைப்பற்றி விடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள்.

ராகுல்காந்தி கையில் இருக்கும் வேட்பாளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்ம.தங்கவேல் (முத்தரையர்), சிவகங்கையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் (அகமுடையார்), தேவகோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி (யாதவ்), திருமயம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் (கள்ளர்), காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம்(வல்லம்பர்)ஆகியோர் பெயர் இடம் பெற்றிக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக