செவ்வாய், 12 மார்ச், 2019

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!“திமுக மாவட்டச் செயலாளர்கள்,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நேற்று (மார்ச் 11) பகலில் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம், ‘திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எப்போது அறிவிக்கப்படும்?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘எந்தத் தொகுதிகள் என்பது குறித்து காங்கிரஸ், விசிக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேசிமுடித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டுவிட்டோம். ஆனாலும் மரபுப்படி அனைத்துக் கட்சிகளுடனும் பேசி முடித்த பிறகு தொகுதிகள் எவை என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடுவோம்’ என்று குறிப்பிட்டார். இதன் பிறகு நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகளும் அறிவாலயம் வந்து தங்களது தொகுதிகள் இன்னதென்று பேசி முடிவெடுத்துவிட்டுப் புறப்பட்டனர்.
ஆக இப்போது காங்கிரசோடு மட்டும்தான் எந்தெந்த தொகுதிகள் என்பதில் உடன்பாடு காண வேண்டியுள்ளது. திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ்தான் முதன் முதலாக கையெழுத்திட்டு பத்து தொகுதிகளைப் பெற்றது.அதையடுத்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கட்சிகள் எல்லாம் தங்கள் தொகுதிகளை இறுதி செய்துவிட்ட நிலையில் முதலில் வந்த காங்கிரஸ் மட்டுமே இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது.
நாளை ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தை ஒட்டி இன்று காலை குமரிக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு இன்று சென்னை வந்துவிடுகிறார். காங்கிரஸோடு பிணக்கில் இருக்கும் சில தொகுதிகள் பற்றி தீர்வு கண்டுவிட்டால் திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் தயார்தான் என்கிறார்கள்.
திமுக வட சென்னை, தென் சென்னை , மத்திய சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை , கடலூர், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தேனி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தேனியில் காங்கிரஸ் சார்பில் ஆரூண் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளில் தேனி இல்லை என்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மற்றும் கோவை தொகுதிகளிலும், சிபிஐ நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளிலும், மதிமுக ஈரோடு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஐஜேகே பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும், கொமதேக நாமக்கல் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.
பாக்கியிருப்பது காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் பத்து தொகுதிகளின் பட்டியலில் கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், அரக்கோணம், சேலம், திருவள்ளூர் , திருச்சி, ஆரணி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் உள்ளன. ஆனால் இவற்றில் ஆரணி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க திமுக மறுக்கிறது. அதற்கு பதிலாக வேறு தொகுதிகளைத் தருவதாகச் சொல்கிறது திமுக. ஆனால் ஆரணியையும், திண்டுக்கல்லையும் காங்கிரஸ் கட்டாயமாகக் கேட்கிறது. இதுதான் இப்போது பட்டியல் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.
இன்று கே.எஸ். அழகிரி சென்னை வந்ததும் ஸ்டாலினோடு பேசி முடிவு காணப்படும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருவதற்குள் தொகுதிப் பட்டியலை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின்” என்று முடிந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக