செவ்வாய், 26 மார்ச், 2019

சீரழிந்த தேர்தல் ஆணையம் .. சீரழித்த பாஜக

Shankar A : மோடியின் ஆட்சியில் சீரழிக்கப்பட்ட அமைப்புகளிலேயே மிக மிக ஆபத்தான சீரழிவாக நான் பார்ப்பது, தேர்தல் ஆணையத்தின் சீரழிவையே.
தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகள் அவ்வப்போது குறைகளை கூறினாலும், பரந்துபட்ட அளவில், தேர்தல் ஆணையம் இந்நாள் வரை குறை கூற முடியாத ஒரு அமைப்பாகவே இருந்து வந்தது. தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள், புகார் இல்லாதவர்களாக, குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காதவர்களாக பார்த்து நியமிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில்தான், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிப்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் மீது புகார் வந்தது. 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது, மோடியின் அறிவிப்புகள் முடியும் வரை காத்திருந்து மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தது, கோவா முதல்வர் இறந்த மறுநாள் தேர்தல் தேதியை அறிவித்தது, தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது, டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவே மாட்டேன் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடுவது, நாம் தமிழருக்கு இரட்டை மெழுகுவர்த்தி கொடுக்காமல் விட்டது,
திருமாவளவனுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்காமல், ஜிகே.வாசனுக்கு சைக்கிள் சின்னத்தை உடனடியாக ஒதுக்கியது உட்பட தேர்தல் ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன.


இப்படி மோடிக்கு ஆதரவாக செயல்படும் இந்த தேர்தல் ஆணையம் நாளை முடிவுகளில் தில்லு முல்லு செய்யாது என்று எப்படி நம்புவது ?
அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை சிதைந்தால் That will lead to chaos
சட்டத்தை மதித்து, விதிகளை பின்பற்றி மக்கள் நடப்பதற்கு காரணம், சட்டத்தின் மீது உள்ள அச்சம் மற்றும் அமைப்புகளின் மீது உள்ள நம்பிக்கை. இந்த நம்பிக்கை சிதைந்தால், விளைவுகள் மிக மிக மோசமானதாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக