வெள்ளி, 22 மார்ச், 2019

ஈரோட்டில் மதிமுக தனி சின்னத்தில் போட்டி: பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

tamil.thehindu.com ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அக்கட்சியின் பொருளா ளர் அ.கணேசமூர்த்தி போட்டி யிடுகிறார். அங்கீகரிக் கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை மதிமுக இழந்ததால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறைந்த கால அவகாசத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்வது கடினம் என்பதால் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கேட்டுக் கொண்டது. இதனை பரிசீலித்து முடிவெடுப்பதாக வைகோவும் கூறியிருந்தார். இது தொடர்பாக மதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வந்தார்.

இந்நிலையில் வைகோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட் பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல்அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்" என தெரிவித் துள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 20 தொகுதி களில் போட்டியிடுகிறது. இது தவிர இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் (பெரம் பலூர்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் (நாமக்கல்), விசிக வேட்பாளர் டி.ரவிகுமார் (விழுப் புரம்) ஆகியோர் திமுகவின்உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுகின்றனர். மொத்தம் 23 தொகுதிகளில் உதயசூரியன் களத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக