செவ்வாய், 5 மார்ச், 2019

விருதுநகர் வைகோ போட்டியிட்டால் வி.வி.ஐ.பி. தொகுதியாகி விடும்..

nakkheeran.in - சி.என்.ராமகிருஷ்ணன் : திருப்பரங்குன்றம், திருமங்கலம்,
விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவைத் தொகுதி. இதன் சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன், "ஒரு நல்ல எம்.பி. என்று தொகுதியில் நான் பெயர் எடுத்திருக்கின்றேனா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக எனக்குக் கெட்ட பெயர் இல்லை'’என்கிறார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்ட ஜெ.பேரவை செயலாளருமான ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சிருந்தாலும், அவருடைய இன்னொரு சாய்ஸாக இருக்கிறது முக்குலத் தோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதி.
1999-ல் தன் தந்தை ஜஸ்டிஸ் ராமசாமிக்கு இத்தொகுதியில் போட்டியிடவாய்ப் பளித்து, தன்னையும் 1991-ல் சரத்சந்திர சின்ஹா இந்திய காங் கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தி, விருதுநகர் எம்.எல்.ஏ. ஆக்கிய ஜெயலலிதாவின் பாச மறிந்து, எடப்பாடி எப்படி யும் தனக்கு சீட் தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கி றார்
நடிகை ஸ்ரீதேவியின் மைத்துனரான சஞ்சய் ராமசாமி. மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மகன் ராஜ் சத்யனை எம்.பி. ஆக்கிப் பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
திருமங்கலம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் ஆர்வம்காட்டி வருகிறார். ‘"விருதுநகர் தொகுதியில் நிற்பதற்கு எங்களிடம் வேட்பாளர் இருக்கிறார். பா.ம.க. மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமாவுக்கு சீட் தந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்'’என்று பா.ம.க.வும் இத்தொகுதியைக் கேட்டு வைத்திருக்கிறது.


"தி.மு.க. சார்பில் போட்டி யிடுவதற்கு பசையான வேட்பாளர் யாரும் இல்லை'’என்று தலைமையிடம் விருதுநகர் மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ். ஆரும் தங்கம் தென்னரசுவும் கூறி, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு வழி விட்டிருக்கின்றனர். ஏனென்றால், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பேச்சைத் தட்டாதவராகவும், அனுசரித்துச் செல்பவராகவும் இருக்கிறார் மாணிக்கம் தாகூர். இன்னொரு காரணமும் இருக்கிறது. அ.தி.மு.க. மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்தி ரபாலாஜியுடன் தொடர்பில் இருப்பவர்கள் இம்மாவட்ட தி.மு.க. மா.செ.க்கள். அதனால், தி.மு.க. வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்தி, எதற்காக நட்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு. ஆனாலும், சங்கரன்கோவில் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியனை இங்கு தி.மு.க. வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என்று காங்கிரஸ் தரப்பு சந்தேகம் எழுப்புகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கருக்கும் எம்.பி. கனவு இருக்கிறது. ஆனாலும், "ராகுல் காந்தியோடு நேரடி தொடர்பில் உள்ள மாணிக்கம் தாகூருக் குத்தான் சீட்' என்கிறார்கள் அக்கட்சியினர்.

vaikoவிருதுநகர் மாவட்ட காங்கிரஸில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி சேர்மன் ஞானசேகரன், விருதுநகர் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி போன்ற சீனியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது வருத்தம் கொண்ட கதர்ச்சட்டை கள், ‘புதுமுகம்’ ஒன்றே காங்கிரஸ் தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள். யார் அந்தப் புதுமுகம் என்று கேட்டால், குவைத் ராஜா மக்கள் சமூக இயக்கம் என்ற பெயரில் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளெல்லாம் வழங்கி, தனி ராஜாங்கம் நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த குவைத்ராஜாவைக் கை காட்டுகிறார்கள்.

மாணிக்கம் தாகூரோ “"குவைத்ராஜா விருதுநகர் தொகுதியின் வேட்பாளரா? இது காங்கிரஸ் பேரியக்கம். அ.தி.மு.க. போன்ற கட்சி அல்ல. மாவட்ட, மாநில தலைவர்களுக்குத் தெரி யாமல், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி காங்கிரஸ் வேட்பாளராக முடியும்?' என்று கேட்கிறார். ஆனாலும், டெல்லி தொடர் புள்ள குவைத்ராஜா, நேரடியாகவே காய் நகர்த்தி வருகிறார். "அவரது கொடைவள்ளல் இமேஜ் குறித்து காங்கிரஸ் தலைமை தெரிந்துகொண் டால், அவர்தான் வேட்பாளர்' என்கிறார்கள், மாணிக்கம் தாகூர் அதிருப்தியாளர்கள்.

முக்குலத்தோர் மெஜாரிட்டியாக உள்ள தொகுதி என்பதால், அ.ம.மு.க.வும் வரிந்து கட்டுகிறது. அ.தி.மு.க.வும் காங்கிரஸும் முக் குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்கும்போது, கணிசமான வாக்குகளைக்கொண்ட நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த, விருதுநகர் கிழக்கு மா.செ. வும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழ னைக் களமிறக்கும் யோசனை யில் இருக்கிறது அக்கட்சித் தலைமை. முன்னாள் சபாநாய கர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, ஸ்ரீவில்லி புத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரியின் கணவர் முத்துராஜ் போன்றவர்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளார்கள்.

சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் இத்தொகுதியைக் கைப்பற்றியது ம.தி.மு.க. இரண்டு தடவை இத்தொகுதியின் எம்.பி. யாக டெல்லி சென்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. விருதுநகர் மக்களவை தொகுதியாக மாறிய பிறகு, பாராளுமன்றத்தில் கர்ஜிக்கக் கூடிய வைகோ ஏனோ இத்தொகுதி மக்களின் சாய்ஸாக இல்லை. எம்.பி.யாக இருந்த போது சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற நற்பெயரும், கணிச மாக உள்ள நாயக்கர் சமுதாய வாக்குகளும் அவருக்குப் பலம் சேர்ப்பதாக இருந்தாலும், திருச்சி தொகுதியில் போட்டி யிடும் முடிவில் இருக்கிறாராம் அவர். ஒருவேளை, விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கிவிட்டால், பட்டாசுத் தொழில் முடக்கம் போன்ற அதிமுக்கிய பிரச்சனைகளால் தொகுதி மக்கள் பலரும் அவதிப் படும் நிலையில், வைகோ போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அடித்துச் சொல் கிறார்கள் மறுமலர்ச்சியினர்.

வைகோ போட்டியிட்டால் வி.வி.ஐ.பி. தொகுதியாகி விடும் விருதுநகர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக