புதன், 27 மார்ச், 2019

நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை :தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு

தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு - நிர்மலா சீதாராமன் எச்சரிக்கைமாலைமலர் : டெல்லியில் இன்று பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 'தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடருவோம் 'என எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு
நடவடிக்கையை கொண்டு வந்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் கமிஷனாக கேட்டது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த வீடியோ போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளது.


இந்நிலையில், ராணுவ துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். போலி வீடியோக்களை வெளியிட்டு பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு பாஜக மீது அவதூறு பரப்புவது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் முறையல்ல. அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பா.ஜ.க. தலைவர் பூபேந்திர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக