சனி, 2 மார்ச், 2019

நடிகை ஹன்சிகா .. மகா படத்தில் சுருட்டு புகைத்து அழகு காட்டி .. இந்து மத அமைப்புக்களுக்கு பிடிக்கலயாம்.

மின்னம்பலம் : நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஜமீல் இயக்கி வரும் மஹா திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இப்படம் ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படமாகும். இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் ஹன்சிகா துறவி வேடமணிந்து சுருட்டு புகைப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் சில இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரில், இந்து மதத்தையும், பெண் துறவிகளையும் அவமதிக்கும் விதமாக ஹன்சிகா புகைப்பிடிப்பது போல போஸ்டரில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. புகாரளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹன்சிகா மற்றும் ஜமீல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக