மக்களவை தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
tamil.thehindu.com : நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, பாஜகவும் அதே தொகுதியில் போட்டி யிட ஆர்வம் காட்டி வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா, தனி தொகுதியாக இருந்தவரை சொந்த தொகுதியி லேயே போட்டியிட்டு வந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு பெரம்பலூர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
எனவே, பொது தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 தேர்தலில் 2-வது முறையாக நீலகிரியில் போட்டி யிட்ட ஆ.ராசா தோல்வி அடைந்தார். அறிமுகமே அல்லாத அதிமுக வேட்பா ளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போது 3-வது முறையாக நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா விருப்ப மனு அளித்துள்ளார்.
எதிர் தரப்பில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி.யான சி.கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகநாதன் உட்பட 27 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள் ளனர்.
மக்களின் பல ஆண்டு கோரிக்கை யான அத்திக்கடவு - அவிநாசி திட்டத் துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், இதனால் பயன்பெறப் போகும் அவிநாசி, மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதிகள் நீலகிரி மக்களவை தொகுதியில் வருகின்றன. எனவே, வெற்றிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர்.
ஏற்கெனவே, 1998, 1999-ல் அதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜகவுக்கு நீலகிரி தொகுதி ஒதுக்கப்பட்டு, மாஸ்டர் மாதன் இருமுறையும் வெற்றி பெற்றார். இதனால், பாஜகவும் இத்தொகுதியில் ஒரு கண் வைத்துள்ளது.
இதற்கிடையில், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் கடந்த ஒருமாத காலத்தில் நீலகிரியில் பலமுறை ஆய்வு செய் துள்ளார்.
உதகை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பாஜக வேட் பாளராக இவர் களமிறங்கக்கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது
முக மகளிரணி செயலாளராக இருக்கும் கனிமொழி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது பதவிக்கால ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக 12 ஆண்டுகள் கனிமொழி இருந்துள்ளார்.
தற்போது, மக்கள் மூலமாக நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கனிமொழியின் விருப்பமாக உள்ளது. இதையொட்டி அவர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகி விட்டது.
இருப்பினும், விருப்ப மனு அளித்த பிறகு பேட்டியளித்த கனி மொழி, தலைமைக் கழகம் முடிவு செய்த பின்னர்தான் தூத்துக்குடியில் தான் போட்டியிடுவது இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

COMMENT
தூத்துக்குடி
மக்களவை தொகுதியைப் பொறுத்தவரையில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி,
திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6
சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இவற்றில் திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய
2 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக