ஞாயிறு, 24 மார்ச், 2019

ஈரோடு கணேசமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் .. மதிமுக அறிக்கை

நக்கீரன் : திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில்
போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.
ஆனால் மதிமுக தனது சின்னமான பம்பரம் சின்னம் இல்லை என்ற நிலையில்  வேறொரு சுயேட்சை சின்னத்தில் நின்று சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது அக்கட்சியினரே விரும்பவில்லை மேலும் சுயேட்சை சின்னம் என்பது அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என திமுக மூத்த நிர்வாகிகள் திமுக தலைமைக்கும் ம. தி.மு.க. தலைமைக்கும் கூறினார்கள்.< இதன் தொடர்ச்சியாக நக்கீரனில் நாம் மதிமுக சுயேச்சை .சின்னத்தில் நின்றால் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று செய்தி வெளியிட்டோம்,  இதையெல்லாம் தொடர்ந்து இன்று இரவு மதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமையுடன் பேசி உதயசூரியன் சின்னத்தில் தான் ஈரோட்டில் போட்டியிட வேண்டும் என்று பேசினார்கள்.


வெற்றிதான் முக்கியம் என்ற நிலையில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக முடிவு செய்து, இன்று இரவு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

 உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி நிற்பதால் எதிரியான அதிமுக கலக்கத்தில் உள்ளது.


Natarajan Kandasamy : · நக்கீரன் செய்தி : வெற்றிதான் முக்கியம் என்ற நிலையில் ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக முடிவு செய்து, இன்று இரவு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், உண்மையிலேயே வரவேற்க தக்க முடிவு. ஈரோடு மாவட்டத்தின் திராவிட இயக்கத்தின் பெரும் தலைவரில் ஒருவரான, கணேச மூர்த்தி அவர்கள் உதயசூரியனில் களம் காண்பது என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 90 களின் ஆரம்பத்தில் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்தார். 1992 ல் மதிமுக பிரிந்தபோது மதிமுக வுடன் சென்றார். அவர் விட்டுசென்றதால் அவருக்கு பின் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் தலைவராக உரவானார். இன்று அவர் திமுகவின் துணை பொது செயலாளர். அவருக்கும் பின் NKK பெரியசாமி அவர்கள், அவரும் மாநில அமைச்சராக 5 ஆண்டுகள் பணியாற்றிவிட்டார். அவருக்கும் பின் NKKP ராஜா, அவரும் மாநில அமைச்சராக இருந்தும் விட்டார். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் மூத்தவரான கணேச மூர்த்தி அவர்களால் மிகப்பெரும் உயரத்தை அடையமுடியவில்லை. இன்று உதயசூரியனில் களம் புகுந்து வென்று மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக