வியாழன், 28 மார்ச், 2019

தமிழிசை சவுந்தரராஜன் :“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கற்ற பரம்பரை,, ஜாதிவெறியை தூண்டும் கருத்து


இ.கார்த்திகேயன் - .vikatan.com -ப.கதிரவன் : “தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்களை நிராகரிக்க காரணம் இருந்தும் நிராகரிக்கவில்லை. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது அப்பட்டமான தேர்தல் நேர்மை மீறல்.” என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர். கெளதமன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரிசீலனையில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்
இதற்கு தமிழ் பேரரசு கட்சித் தலைவரும், இத்தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான இயக்குநர் கௌதமன் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, கனிமொழி, தமிழிசை ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவை அளித்தார் கெளதமன்.
ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்பதில் சிக்கல் எழுந்தது.  4 மணி நேரத்துக்குப் பிறகு மறுபரிசீலனையில் இருவரது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒரு இயக்குநராக உள்ளார் என்பதையும், தமிழிசையின் கணவரின் வருமானம் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனவும் தி.மு.க.,வினர் சுட்டிக்காட்டினர். இந்த காரணத்துக்காக அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்கலாம். ஆனால் அவர் நிராகரிக்கவில்லை.

இதைப்போல, சிங்கப்பூர் வங்கிக்கணக்கு தொடர்பான சிங்கப்பூர் பான் கார்டு எண்னை வேட்புமனுவில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி குறிப்பிடவில்லை என பா.ஜ.க. தரப்பில் குற்றம்சாட்டினர். ஆனால், இரு வேட்பாளர்களின் மனுவும் சிறிது நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது அப்பட்டமான தேர்தல் நேர்மை மீறல். இதற்கு எங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளோம். இதற்கு தேர்தல் அதிகாரி விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளார். சரியான விளக்கம் அளிக்கவில்லையெனில் சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள்வோம்.
தூத்துக்குடியில் எங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் அறிவிப்போம். தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைதளமான ட்விட்டரில் “நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கற்ற பரம்பரை” என பதிவிட்டுள்ளார். அவர் பிறந்த சமூகம் எங்களால் மதிக்கப்படக் கூடியது. காமராசரால் மதிக்கப்படக் கூடியது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் எடுத்து வைத்த சில மணிநேரங்களிலேயே அவர் பாரத் பெட்ரோலியத்தின் ஒரு இயக்குநராக இருப்பதாக தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுக்கு தார்மீகமாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர் தேர்தலிலிருந்து விலக வேண்டும் எனக்கூறினார்.

கனிமொழி, தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்கள் தாமதமாக ஏற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி பதிலளித்துப் பேசுகையில், “பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுவின் மீது எழுந்த சந்தேகங்களுக்கு கட்சியினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவை குறித்து நீதிமன்றத்தை அணுகும்படியான அறிவுத்தல்களால் அதை வெளிப்படையாக கூற முடியாது. இருப்பினும், எதிர்ப்புகள் ஏதும் உள்ளதா என மற்ற வேட்பாளர்களிடம் கேட்டறிந்த பிறகே மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக