ஞாயிறு, 31 மார்ச், 2019

முகிலன் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு ..

முகிலன் மீது பாலியல் புகார்!மின்னம்பலம் : சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் யார் என்பது குறித்து, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சில ஆதாரங்களை வெளியிட்டார். அன்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றவர், அடுத்த நாள் மதுரையில் ஒரு நண்பரைச் சந்திக்கவிருப்பதாகத் தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த நாள் அவர் மதுரை செல்லவில்லை. இதையடுத்து அவர் காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட அறிக்கையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்று சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “முகிலன் தன்னிடம் அன்பாகவும், பாசமாகவும் பழகினார். மற்றவர்களிடம் தன்னை மகள் என்றும் அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால் பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னிடம் உடலுறவு கொள்ள முயற்சி செய்தார். தான் மறுத்தும் என்னை பலமுறை மிரட்டி உடலுறவு கொண்டு இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வருகிறார்” என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் முகிலன் மீது குளித்தலைக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக