வியாழன், 14 மார்ச், 2019

கால காலமாய் தொடரும் கட்டுப்பாடுகள் ... பெரியார் பூமியில் ஏனிந்த அடிமைத்தனம்?

Devi Somasundaram : கால காலமாய் தொடரும் கட்டுபாடுகள் .
பலருக்கு தெரியும் முத்து லெட்சுமி அம்மா தான் முதல் பெண் டாக்டர் .. முத்து லெட்சுமி அம்மா நல்லா படிப்பார் ..அவர்க்கு டாக்டர் படிக்க ஆசை . அப்ப பெண்கள் மருத்துவ கல்லூரி இல்ல .அவர் பிடிவாதம் பிடிக்க புதுகோட்டை சமஸ்தான மன்னர் ரெகமண்ட் செய்ய சென்னை மருத்துவ கல்லூரில ( mmc ) .அனுமதி கடிதத்தோட டீன மீட் செய்றாஙக .
டீன் மன்னர எதுர்த்து எதும் செய்ய முடியாம இது ஆண்கள் கல்லூரி நீ ஒரு பெண் க்ளாஸ்ல படிச்சா அது ஆண்கள ப்ரோவோக் செய்யும் க்ளாஸ்ல அனுமதிக்க முடியாது ..கூண்டு வண்டிகுல்ல இருந்து படிக்க தயார்ன்னா அனுமதிக்கிறேன்னு சொல்ல .முத்துலட்சுமி அம்மா மறுப்பே சொல்லாம சரின்னு ஒத்துகிட்டாஙக .
மாட்டு வண்டி ய ( கூண்டு வண்டி ) மாணவர்கள் வருவதற்கு முன்னாடியே காலேஜ் குல்ல வந்து வகுப்ப ஒட்டி நிறுத்தி வண்டில முன்ன பின்ன துணி ல திரை போட்டு...அந்தம்மா உள்ள இருப்பதே வெளில தெரியாம க்ளாஸ் கவனிக்கனும்

மாலை மாணவர் எல்லாம் வெளியேறினதும் தான் வண்டி வெளில போகனும்..
ப்ராக்டிகல் க்ளாஸ் அவர்க்கு மட்டும் தனியா மாணவர்கள் இல்லாத லீவ் நாளில் நடத்த படும் .
பீரியட்ஸ்ல , நாப்கின் அறிய படாத அந்த காலதுல யூரின் போக கூட வண்டிலேர்ந்து வெளிவராம .அந்த வண்டிகுல்லயே மத்தியம் சாப்ட்டு கிட்ட தட்ட 10 மணி நேரம் மேல அசங்காம வண்டிகுல்ல அமர்ந்து மருத்துவம் படித்தார் ..
இந்த ரூல்ஸ்லாம் பார்த்ததும் பெண்கள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்குனு தோணிச்சு ..
எத்தனை கட்டுபாடுகள் பெண்ணுக்கு .இது தான் பெண் சுதந்திரமா ? .

சொல்ல மறந்துட்டேன்....அந்த காலத்துல gate அப்டினு சொல்ல படும் ப்ரேக்
மெடிக்கல் கல்விக்கு 5 வருடம் gate எனப்படும் சிஸ்டம் ..முதல் வருடம் தேர்வில் தோல்வி அடைந்தால் அதை எழுதி பாஸ் செய்தா தான் அடுத்த வருடம் போகலாம்
அதனால் குறிப்பிட்ட 5 வருடத்தில் பாஸ் செய்பவர் யாரும் இருக்க மாட்டார்கள் ..முத்து லெட்சுமி அம்மா 5 வருடத்தில் படிப்பை முடித்து அனைத்து சப்ஜெக்டிலும் கோல்ட் மெடல் பெற்ற முதல் மாணவர் என்று பாராட்ட பட்டவர் .
அப்பவும் இப்டி பொம்பளைலாம் படிக்க கிளம்புவதால் தான் ரேப் நடக்குதுன்னு பலர் பேசி இருப்பார்கள் .
இத்தனை தடைகளை தாண்ட போராடி நம் முன்னோர் பெற்று தந்த சுதந்திரத்தை நாம் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல போராடனும் .
அன்று கூண்டுகுல்ல உட்கார சொன்னார்கள் .இன்று கூந்தலை கட்டு , உடலை மூடு என்கிறார்கள் .. கட்டுபாடுகளின் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர கட்டுபாடு மாறல ..
இதை நாம் எதிர்த்து உடைத்தால் நம் அடுத்த தலைமுறைக்கு வேறு ஏதேனும் கட்டுபாடு போட படும் .. விடுதலைகான போர் ஓய்வதே இல்லை ..
கற்ற்ல் எனும் தாகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக