ஞாயிறு, 3 மார்ச், 2019

திருப்பதியில் ரணில் விக்கிரமசிங்க .. நேர்த்திக்கடன் துலாபாரம் செலுத்தினார்

Tirupathi Ezhumalayyan Temple; Sri Lanka Prime Minister Ranil wickramasinghe Darshan with family tamiloneindia :திருப்பதி: ஏழுமலையானை தரிசித்தார் இலங்கை ரணில் விக்ரமசிங்கே. ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மனைவி மற்றும் இலங்கை எம்பிக்கள் குழுவினருடன் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.
 திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் நேற்று இரவு தங்கியிருந்த ரணில் விக்ரமசிங்கே இன்று அதிகாலை சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றார்.
கோவில் முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கே தம்பதிக்கு வேத ஆசி வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக