வெள்ளி, 22 மார்ச், 2019

7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி

THE HINDU TAMIL ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை சாத்தியமே இல்லை என எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்  சுப்பிரமணியன் சுவாமி. அப்போது அவர் கூறியதாவது:
''ராஜீவ் காந்தி கொலைகாரர்களை விடமாட்டோம். என்ன ஆனாலும் விடுதலை கிடையாது. எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.
அவர்களை விடவே மாட்டோம். மாநில அந்தஸ்தில் இருக்கிற தமிழிசைக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது. இதுகுறித்து டெல்லிதான் முடிவு செய்ய வேண்டும். எழுவர் விடுதலைக்கு டெல்லி ஒத்துக்கொள்ளாது. 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை, அது நடக்காது'' என்றார் சுவாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக