வெள்ளி, 1 மார்ச், 2019

பாஜகவின் 6,000 வாட்ஸ்அப் க்ரூப், 700 ஃபேஸ்புக் பக்கம், 45 யூடியூப் சேனல் .. நமோ வாரியர்ஸ் படை

6,000 வாட்ஸ்அப் க்ரூப், 700 ஃபேஸ்புக் பக்கம், 45 யூடியூப் சேனல்; `சோசியல் பி.ஜே.பி’ தயார்!
நிர்மல் குமார் - பி ஜே பி. ஐ.டி. விங்blogger.com: `நமோ வாரியர்ஸ்னு ஒரு படை உருவாகியிருக்கு. அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்றதுக்குள்ள நமோ வாரியர்ஸ் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுடும். இனிமே பாருங்க எங்க ஆட்டத்தை!’
தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, எல்லா அரசியல் கட்சிகளுமே தங்களை, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் பலப்படுத்திக்கொண்டு வருகின்றன.
அவற்றில் முக்கிய அம்சமாகச் சமூக வலைதளங்களின் உதவியுடன், கட்சிகளின் ஐ.டி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு,
அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் களமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்காக எல்லாக் கட்சியிலும் ஐ.டி விங் கட்டாயமாக்கப்பட்டன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை சுமார் 6,000 பேரை சமூக வலைதளங்களின் மூலமாகத் தேர்ந்தெடுத்து, `நமோ வாரியர்ஸ்’ என்கிற பிரசாரப் படையை உருவாக்கி இருக்கிறது.
மார்ச் 10-ம் தேதி நடக்கவிருக்கும் பி.ஜே.பி-யின் இந்த ஐ.டி விங் அறிமுக விழாவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க இருக்கிறார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சமூகவலைதளங்களில் பயன்படுத்தும் பல்வேறு உத்திகள் குறித்த ஆலோசனைகளும் அன்றைய தினம் நடைபெறும் பி.ஜே.பி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பி.ஜே.பி-யின் தகவல் தொழில்நுட்பம் மூலமான பிரசார வியூகம் குறித்து மேலும் அறிந்துகொள்ள அந்தக் கட்சியின் ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசினேன்.


“கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலுக்கு மிகப்பெரும்படையே தயாராகிக்கொண்டிருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் 6,000 பேர் விண்ணப்பம் செய்திருக்காங்க. இதுபோக மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்னு இதுவரை மொத்தம் ஏழாயிரம் பேர் பி.ஜே.பி-யோட தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்காங்க. தனித்தனியாக இயங்கிகிட்டு இருந்த, இவங்க எல்லோரையும் சேர்த்து `நமோ வாரியர்ஸ்னு’ ஒரே குடையின் கீழ் கொண்டுவந்திருக்கோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தப் பிரிவைத் தொடங்கி வைக்க வர்றதுக்குள்ள நமோ வாரியர்ஸ் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிடும். இனிமேல் பாருங்க எங்களின் ஆட்டத்தை’’ என்றார்.
“தேர்தலில் என்னென்ன மாதிரியான உத்திகளைச் செயல்படுத்தப்போறீங்க?’’
“தேர்தல் உத்திகளை ஏற்கெனவே செயல்படுத்த ஆரம்பிச்சிட்டோம். சில உத்திகளை வெளியே சொல்ல முடியாது. வேற என்னென்ன பண்ணியிருக்கோம்னு கேட்டீங்கன்னா, 6,000 வாட்ஸ்அப் க்ரூப்ஸ் உருவாக்கியிருக்கிறோம். பிரதமர் மோடி அரசு, மக்களுக்குச் செய்த சாதனைகளை வீடியோவா எடுத்து தினமும் 30 வீடியோவை அந்தக் க்ரூப் மூலம் ஃபார்வர்ட் பண்றோம். கருத்தியல் ரீதியாக மீம்ஸ் உருவாக்குவதற்கு தனிப்படையை நியமிச்சு இருக்கோம். 45 யூடியூப் சேனல்ஸ் மூலமும் பிரசாரம் செய்ய இருக்கோம். அதுல 15 சேனல் நேரடியாக பி.ஜே.பி-க்கு ஆதரவாகச் செயல்படும். மற்ற 30 சேனல்கள் மறைமுகமாக எங்களுக்கான சேனல்களாகச் செயல்படும். அதுமட்டுமல்லாம 700 ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கியிருக்கோம். அதுல 10,000 முதல் 1.5 லட்சம்பேர் வரை உறுப்பினர்களாகவும், பின் தொடர்பவர்களாகவும் இருக்காங்க. இவங்க எல்லாம் ரொம்ப ஆக்டிவா இருக்காங்க.’’
“ஆனா, இவ்வளவு பேர் இருந்தும் #GoBackModi ட்ரண்டிங்ல வருதே..?’’
“பி.ஜே.பி-க்கு எதிராக 20 கட்சிகளுக்கு மேல 7 மாநிலங்கள்ல இருந்து ட்வீட் பண்ணினாங்க. அப்படியிருந்தும் அவங்களால மூன்றரை லட்சம் ட்விட்தான் போட முடிஞ்சுது. ஆனா, welcome Modi’ன்னு நாங்க ஏழு லட்சம் tweet போட்டோம்.சொல்லப்போனா, ட்ரெண்டிங் ஆகுறத வெச்சு எதையும் முடிவு பண்ண வேணாம்.’’
“போட்டோ ஷாப், போலிச் செய்திகலெல்லாம் பி.ஜே.பி-யால் பகிரப்படுறதாச் சொல்றாங்களே?’’
“யாரோ ஒருவர் அப்படிப் பண்றாங்க. அதுக்காக, நாங்க எல்லோரும் இப்படித்தான்னு குற்றம் சுமத்தக் கூடாது.’’
“தேர்தல் நெருங்கும்போது உங்களோட அடுத்தடுத்த செயல்பாடுகள் எப்படியிருக்கும்..?’’
“இன்னும் பலபேர் எங்க சமூக வலைதள அணியில சேர்றதுக்கு விண்ணப்பம் செய்துட்டு இருக்காங்க. அதேபோல விண்ணப்பம் செய்த எல்லோரையும் சேர்த்துக்கிறது இல்லை. எங்க ஆளுங்க அவங்கள தொடர்புகொண்டு போன்ல பேசுவாங்க. அவங்க எதுல ஆக்டிவா இருக்காங்களோ அதுல போயி அவங்களோட செயல்பாடுகள் எப்படி இருக்குன்னு பார்ப்போம். இதைச் செய்யறதுக்கென்றே எங்ககிட்ட 100 வாலன்டியர்ஸ் இருக்காங்க. மற்ற கட்சிகளின் ஐ.டி விங்-வுடன் ஒப்பிட முடியாத அளவு பலத்தோட நாங்க இருக்கோம். மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்குவோம் என்பதுதான் நமோ வாரியர்ஸின் ஒரே குறிக்கோள்.’’
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக