மின்னம்பலம் : தேமுதிகவின்
இன்றைய கூட்டணிப் பேச்சுவார்த்தை நிலவரம் என்ன என்று மின்னம்பலம் தமிழின்
முதல் மொபைல் தினசரிப் பத்திரிகை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வாசகர்கள்
விசாரிக்கும் அளவுக்கு அக்கட்சியின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம், நேற்று என தொடர்ந்து சென்ற விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகளோடு கூட்டணி பற்றி தொடர்ந்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில் கூட்டணி நிலவரம் பற்றி தேமுதிக தலைமை நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதிமுக கூட்டணியில் பாமக ஏழு இடங்களைப் பெற்றதை அடுத்து அதற்கு இணையாகத் தனக்கும் இடம் வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார். ஆனால் அதிமுகவோ, தேமுதிகவுக்கு ஏழு இடங்கள் கொடுப்பது கஷ்டம் என்று பாஜகவிடம் சொல்லிவிட்டது. இது தொடர்பாக பாஜக பிரமுகர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'நீங்க தேமுதிகவைச் சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுக்குறீங்க. ஆனால் அவங்களுக்கு ஏழு இடம் கொடுக்க இப்ப வாய்ப்பே இல்லை. ரொம்ப அதிகபட்சமா ஐந்து சீட்டும் ஒரு ராஜ்யசபாவும் தரலாம். அதையும் நீங்களே அவங்ககிட்ட பேசி முடிங்க' என்று சொல்லிவிட்டார்.
இதையடுத்து இப்போது மீண்டும் தேமுதிகவிடம் பாஜக பிரமுகர்களே பேச ஆரம்பித்துள்ளனர். நாம் ஏற்கனவே மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டதுபோல, 'அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக -புதிய தமிழகம்' என அணி அமைந்தால் 25 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று மத்திய உளவுத் துறை அமித் ஷாவுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது.
இதை மனதில் வைத்து தேமுதிகவை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. அதன்படி நேற்று இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில், "ஐந்து சீட்டும் ஒரு ராஜ்யசபாவும் தருகிறோம். தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் தேமுதிகவுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் உறுதியாக தருகிறோம். ஐந்து சீட்டில் நீங்கள் ஒரு சீட் ஜெயித்தால் கூட அந்த ஒருவருக்கும் ராஜ்யசபா உறுப்பினருக்கும் என இரு மத்திய அமைச்சர் பதவிகளை தேமுதிகவுக்குத் தருகிறோம்' என்று பாஜக கடைசி கட்ட பேரத்தை நடத்தியிருக்கிறது.
பாமகவுக்குக் கூட கொடுக்காத இந்த அதிரடி ஆஃபரை தேமுதிகவுக்குக் கொடுத்திருக்கிறது பாஜக. இதற்குப் பின்னும் விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என பாஜக காத்திருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக