திங்கள், 18 பிப்ரவரி, 2019

வெள்ளை தோல் ஹிந்தி ஆதிக்கத்துக்கு திராவிடம் Waterloo ?

வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மட்டுமல்லாமல் இலங்கை
என்னோடு வேலை செய்த பல ஆப்ரிக்க குடிவரவாளர்கள் தங்கள் அனுபவங்களை கதை கதையாக கூறியுள்ளார்கள் .
அந்த ஹிந்திக்காரர்கள் கூறும் பல சொற்களின் அர்த்தங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
அச்சொற்களின் மூலம் அந்த வெள்ளை தோல் ஹிந்தி வெறியர்களின் மனோ நிலையை நான் அதிகம் தெரிந்து கொண்டேன்
பாஜகவின் ஆட்சி தொடங்கியதில் இருந்து இந்த நிறவெறி மிக மோசமான அளவு கூடியுள்ளது .

தமிழர்களையும் தங்களை விட ஜாதியில் இழிவானவர்கள் என்றுதான் கருதுகிறார்கள். முக்கியமாக கறுப்பு நிறத்துக்கு எதிரான நிறத்துவேஷம் வெள்ளையர்களை விட இந்த வட இந்தியர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் மிக அதிகமாக உண்டு .
இந்து புராணங்களே தென்னிந்தியர்களையும் இலங்கையர்களையும் கோர முகமுடைய அசுரர்கள் அதிலும் ஒரு படி மேலே போய் அவரகள் குரங்குகள் என்றும் அவர்களே ராமருக்கு பாலம் கட்ட உதவினார்கள் என்றெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு முழு வடஇந்திய மக்கள் கூட்டத்தையும் ஜாதி மத நிறவெறி கூட்டமாக உருவாக்கி விட்டார்கள் .

அதிலும் இப்போது மேலும் ஒரு படி முன்னேற்றம் . தற்போதெல்லாம் பொது இடங்களில் கூடுமானவரை இந்தியில் பேச எத்தனிக்கிறார்கள் . இந்தி தெரியாது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்றால் ஏன் உங்களுக்கு இந்தி தெரியாது என்று வேறு கேட்கிறார்கள் . அடியேன் இருக்கும் கனடாவிலேயே அவர்கள் இப்படி என்றால் இந்தியாவில் அவர்கள் எப்படிபட்ட வெறியோடு இருப்பார்கள் என்று சிந்திக்கவேண்டும்.
தங்களின் இந்தி மொழியை உபகண்டம் முழுவதும் பேசவேண்டும் என்ற ஆதிக்கவெறி தற்போது அவர்களிடம் கொழுந்து விட்டு எரிகிறது.
உலகம் முழுதும் தமிழ் ஒலிப்பதால் ஏற்பட்ட கோபம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
தமிழகத்தை ஒரு காலனி மாநிலமாக மாற்ற முழு மூச்சுடன் அவர்கள் பணியாற்றுவது தெளிவாக தெரிகிறது.
முன்பெல்லாம் திராவிடம் என்றால் தமிழகம் மட்டும்தான் ஞாபகத்தில் வரும் .
தற்போது கர்நாடகத்தில் ஆந்திராவில் தெலுங்கானாவில் கேரளாவில் மட்டுமல்ல அதையும் தாண்டி ஒலிக்க தொடங்குகிறது .
தங்களின் வெள்ளை தோல் ஹிந்தி ஆதிக்கத்துக்கு திராவிடம் Waterloo வாகி இருப்பதை கண்டு ஏற்படும் புழுக்கம்தான் அவர்களின் தமிழர்கள் மீதான துவேசத்திற்கு காரணம் .
டென்மார்க் செல்வேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக