வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

நடப்பது “திராவிடம் இல்லாத தமிழ்நாட்டு”க்கான trailer..

அமெரிக்காவின் உளவுத்துறை இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மத மோதல்கள் வெடிக்கும் என சொன்னது உண்மை தான்
LR Jagadheesan : நடப்பது “திராவிடம் இல்லாத தமிழ்நாட்டு”க்கான trailer...
ஒரு காதல் மலர்கிறது. ஜாதி கடந்து. ஆனால் அது “நாடகக்காதல்” என ஜாதிக்கட்சி ஒன்று கூப்பாடு போட்டது. காதலன் காதலியை பலவந்தமாய் பிரிக்கிறது. காதலன் சந்தேகமாய் மரணிக்கிறான்.
தலைநகர் சென்னையில் ஒரு இளம்பெண் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் கொல்லப்படுகிறாள். அவளை காதலித்த மாற்று மதத்தினனே கொன்றான் என்றது மதவாத கட்சி ஒன்று. ஆனால் தன்னை காதலிக்க மறுத்ததாலே அந்த பெண்ணை இவன் தான் கொன்றான் என காவல்துறை ஒருவனை கைதுசெய்கிறது. அவனும் சிறைக்குள்ளேயே சந்தேகமாய் சாகிறான்.
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி சிரமறுத்து குரூரமாய் கொல்லப்படுகிறாள். கொன்ற கொடூரன் உடனே கைதாகிறான். ஆனாலும் போராளிகளுக்கு அது போதவில்லை. அவன் மனைவியையும் கைது செய். அவளொரு நடத்தை கெட்டவள். ஜாதிவெறி பிடித்தவள் என்று பகிரங்கமாக முழங்கின முற்போக்கு முகமூடியில் திரியும் மூடர் கூடங்கள். மனித உரிமை முகமூடியில் திரியும் ஜாதிச்சங்கி ஒன்று.
மற்றதுக்கெல்லாம் பெண்ணியம் முழங்கும் இந்த கும்பல்களின் ஆதரவு முற்போக்கு பெண்ணீயங்கள் யாரும் இந்த அசிங்கத்துக்கு எதிராய் சின்னதாய் முணுமுணுக்கக்கூட இல்லை. இவர்களின் அளவுகோலின்படி எல்லாப்பெண்களும் ஒன்றல்ல போலும். அதுவும் “ஆதிக்கஜாதிப்பெண்”ணை தங்கள் அரசியல் சகாக்கள் துகிலுரிந்தால் அதுவும் இதுகளுக்கு “ஜாதி ஒழிப்பு அரசியல்” என்பதற்குள் வரும்போல.

இதோ இன்னொரு கொடூரக்கொலை. ரத்தம் காய்வதற்குள் மதவெறியும் ஜாதிவெறியும் சேர்ந்துகொண்டு கொக்கரிக்கின்றன. இதனால் தான் கொலையென்றும் இன்னார் தான் கொன்றார்கள் என்றும். இத்தனைக்கும் கொலை நடந்தபோது கொல்லப்பட்டவரின் மகனே உடனிருந்தார். அவர் அளித்த பேட்டிக்கு ஆளுக்கொரு வியாக்கியானம்.
இந்த கொலையை ஒட்டி ஐந்துபேரை கைது செய்கிறது காவல்துறை. அமைதிமார்க்கத்தின் அருமந்த புத்திரர்களோ எங்க ஆட்கள் கொன்றே இருக்கமாட்டார்களென அடித்துப்பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதி மார்க்கம் மட்டுமே 100% ஆளும் நாட்டில் கூட அன்றாடம் கொலைகள் நடப்பதை மறந்தபடி. மறைத்தபடி.
இந்த எல்லாசம்பவங்களுக்கும் பொதுத்தன்மை ஒன்றுண்டு. ஒரு கொலைநடந்தால், ஒரு கொடூரம் நடந்தால் அதைக்கொண்டு தத்தம் அரசியலை முன்னெடுக்க பிணம்தின்னிக்கழுகுகளாய், கழுதைப்புலிகளாய் நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் கும்பல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டன என்பதன் சமீபத்திய அடையாளங்கள் இவை.
இதில் சிலபல சமயங்களில் இதுகளே இப்படியான கொடூர கொலைகளை செய்கிற கொலைகாரர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் கூடுதல் விபரீதம். இவர்களுக்கு கொலைகள், கொடூரங்கள் என்பவை தத்தம் அரசியலை முன்னெடுக்கும் அரியதொரு வாய்ப்பு. பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அரசியலுக்கான பகடைக்காய்கள். அவ்வளவே. அதைத்தாண்டி ஒன்றுமில்லை.
கொலையோ, கொடூரமோ ஏன் நடந்தது எப்படி நடந்தது என்கிற எந்தவித குறைந்தபட்ச விசாரணயும் இன்றி கொல்லப்பட்டவரின் சடலம் புதைக்கப்படுவதற்கு முன்பே இன்னார் தான் கொன்றார்; இதற்காகத்தான் கொன்றார் என்று தீர்ப்பே எழுதி தங்களுக்கு பிடிக்காதவர்களை கழுவிலேற்று என்று கொக்கரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அதிலும் சமூகநீதிக்காகவே அவதரித்ததாக கூறிக்கொள்ளும் போராளி மருத்துவரோ இன்னும் ஒரு படி மேலே. தன் மகனை எம்பி ஆக்க இடம் தேடி அலைந்தவருக்கு காதல் இணையரை பிரித்தால் அது சாதிச்சங்க அரசியலுக்கு சாதகமாகுமென புத்தம்புதிய அரசியல் இலக்கணத்தை தமிழ்நாட்டில் நிகழ்த்திக்காட்டியவர்.
அவரது ஜாதி அரசியலும் சங்கிகளின் மதவாத அரசியலும் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கின்றன. தேர்தல் வேறு நெருக்கத்தில். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உதவுவதற்காகவே உருவானதைப்போல தொடர்ந்து செயற்படும் வஹாபியிச கும்பல் வேறு முழுநேரமாய் உழைக்க உடன்பட்டு செயல்படுகிறது.
கோவையிலும் இது தான் நடந்தது. இப்படித்தான் நடந்தது. மதவாதம் உள்ளூர் ஜாதிச்சங்க அரசியலோடு கைகோர்த்தது. வஹாபியிச மூர்க்கம் எதிர்முனையில். இந்த பேய்க்கும் பிசாசுக்கும் இடையிலான பொறுக்கித்தனத்தால் கோவை கலவரபூமியானது. இன்றுவரை அது இந்துத்துவ ஜாதிச்சங்க அரசியலில் இருந்து மீளவில்லை.
இதுகள் மூன்றும் தஞ்சையிலும் அதையே முன்னெடுப்பதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே விருப்பம். வேண்டுகோள். ஆனால் எல்லா விருப்பங்களும் எல்லா நேரத்திலும் நிஜமாவதில்லை என்பதே யதார்த்தம்.
பிகு: இந்த எல்லா கும்பல்களும் இணையும் பொதுப்புள்ளி — “திராவிடம் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது” அதுவே இவர்களின் குறைந்தபட்ச செயல்திட்டம். அதற்கான trailer தான் இவை. trailerஇன் கதியே இதுவென்றால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக