சனி, 9 பிப்ரவரி, 2019

அஸ்ஸாமில் GobackModi.. டிரேண்டிங் ...

ஆலஞ்சியார்  : ராஃபேல் விவகாரத்தில் பிரதமர்
மோடி மிக கடுமையான முறையில் சிக்கி
கொண்டதாக இன்று அநேகமான நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர்
மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்தில் எந்த டீலிங்காக இருந்தாலும் மோடியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்பதே மிக முக்கியமானதாக பேசபடுகிறது..
தி இந்து பத்திரிக்கை ஆசிரியர் நிர்மலா மீது எந்த குற்றசாட்டும் இல்லாத போது ஏன் பிரதமரை காப்பாற்ற இவ்வளவு முயற்சிக்கிறாரென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. மோடிக்கு எதிராக குற்றசாட்டின் கைகள் நீள்வதால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன ..இந்த பிரச்சினையில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாது என்பது தான் உண்மையாகும்...ஏனெனில் ஆட்சி மாறும் நிலையில் மோடி விசாரணையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .. ..
திரு.ராகுல் நேரடியாக திருடரென குற்றம்சாட்டி பேசிவருகிறார்.. நேற்றுவரை ஊழலுக்கெதிரானவராக இதே ஊடகங்களால் கட்டமைக்கபட்ட பிம்பம் தகர்ந்தெறி தொடங்கியிருக்கிறது வெற்று கூச்சலும் வீராப்பும்,பொய்பித்தலாட்டமும் வாய்சவடாலும் நீண்டநாள் நிலைத்துநிற்காதென்று நீண்டகாலம் தாங்கிபிடிக்கமுடியாதென்று ஊடகங்கள் தூக்கியெறிய தயாராகியிருப்பது ஊடக அறம் இன்னமும் மிச்சமிருப்பதை உணர்த்துகிறது ..
2019 தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ..

..
தென்னகத்தில் தமிழகம் கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் GoBackModi என்ற பதாகைகளை பிரமாண்டமாக நிறுத்தியிருக்கிறார்கள் கறுப்புநாள் என ஆந்திர முதல்வர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.. இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரை வராதே போ என எந்த மாநிலமும் சொன்னதில்லை .. எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன மிக மோசமான தோல்வியை தந்திருக்கிறார்கள் ஆனால் உள்ளே வராதே என்று கேவலபடுத்தியதில்லை தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமாகவே பாஜக மீதான சித்தாந்த எதிர்நிலை பாசிசத்தை விரட்ட வேண்டுமென்ற எண்ணம் தமிழக மக்களின் மனதில் பதிந்துபோன ஒன்று .. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை இப்போது அங்கும் மோடி மீதான கோபம் பெருமளவில் கூடியிருப்பது பாஜக அரசின் செயல்பாடுகளும் ஆந்திராவிற்கான நலதிட்டங்களை கண்டுகொள்ளாமல் காலங்கிடத்தியதும் மோடி மீதான வெறுப்பை அதிகபடுத்தியிருக்கிறது .. மிக மோசமான எதிர்ப்பை வெறுப்பை சந்திக்கிற பிரதமராக மோடி இருக்கிறார் ..
..
தமிழகத்தில் தொடர்ந்து மோடியை கறுப்புகொடிகாட்டியும் பலூன்கள் பறக்கவிட்டும் விரட்டாத குறையாக மரியாதை செய்கிறார்கள் நாளை திருப்பூர் வருகிறார்.. திருப்பூரில் சிறுதொழிலை நசுக்கி அல்ல அழித்து பல்லாயிரணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை இழக்க செய்து முதலாளியாக வலம்வந்தவர்களை கூலி தொழிலாளிக்கிய பெருமை மோடி அரசையே சாரும் .. தமிழகத்தில் தனித்து நின்று நோட்டோவை மிஞ்ச முடியாதவர்கள் அதிக தொகுதிகளை ஒதுக்கும் நிலைக்கு அதிமுக வந்திருக்கிறதென்றால் அதிமுகவின் நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறதென்றே பொருள் .. பாஜகவின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் இவர்கள் அடித்த கொள்ளையை கண்டுக்கொள்ளாமல் காப்பாற்றுகிற கேடுகெட்ட செயலை பாஜக செய்கிறது ..ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடங்குவதாக சொல்லி ஊழலில் திளைத்துநிற்கிற அதிமுகவினரை காப்பாற்றி .. அதிமுகவை அபகரிக்க செயலை மக்கள் புரிந்திருக்கிறார்கள் ...
..
தமிழகத்தை தொடர்ந்து கேரளம் ஆந்திரா என விரிவடையும் மோடிக்கெதிரான GobackModi கோஷம் ...வடமாநிலங்களில் வியாபிக்க தொடங்கியிருக்கிறது அரசியல் அறநெறியற்ற ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்ட மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து மதவெறியை தூண்டி நாட்டை குட்டிசுவராக்கிய மோடி அரசை.. பாசிச பாஜக அரசை.. ஆர்எஸ்எஸின் மறைமுக ஆட்சியை விரட்டிட இப்போதே தொடங்குவோம் ..
#ModiNeverAgain
#IndiaHatesModi
#GoBackModi
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக