செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

பாஜ பற்றி தம்பிதுரைக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது: கனிமொழி எம்பி பேட்டி

தினகரன் :சென்னை: திமுக எம்பி கனிமொழி, சென்னையில் இருந்து நேற்று
காலை 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் பாஜவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், பாஜ ஆளாத மாநில அரசுகள் மீதும், மத்திய அரசு வன்முறைகளை தொடர்ந்து ஏவி கொண்டும் பழிவாங்கிக் கொண்டும் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒரு செயல் நடக்கும்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இந்த பிரச்னையை, நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அக்கட்சியை சேர்ந்த எம்பிக்களும் கூறியிருக்கின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். அதிமுகவை சேர்ந்த தம்பி துரைக்கு பாஜ பற்றி இப்போதுதான் புரிந்திருக்கிறது. எனவே அவர், அவர் கட்சியை சார்ந்தவர்களுக்கும் இதை புரிய வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக