புதன், 13 பிப்ரவரி, 2019

அதிமுக, பாமக, தேமுதிக இருப்பது உறுதியாகிவிட்டது.. பாமகவுடன் பேச்சு நடக்கிறது

மிiன்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:  கூட்டணி- எடப்பாடியை பாஜக மடக்கிய பின்னணி!“பிஜேபி கூட்டணியில் அதிமுக, பாமக, தேமுதிக இருப்பது உறுதியாகிவிட்டது என்ற பேச்சு வெளியில் பரவலாகவே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என்று சொல்லியிருக்கிறார்.
அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அளவுக்கு நகர்ந்தது எப்படி என விசாரித்தோம். ”அதிமுக கூட்டணியில் பாஜக என சொல்லப்பட்டு வந்தாலும், எடப்பாடி மட்டும் கடைசி வரை சம்மதம் சொல்லாமல் இழுத்தபடியே இருந்திருக்கிறார். ‘அதுக்கென்ன அவசரம் பேசலாம்..’ என மழுப்பியபடியே பேசியிருக்கிறார். ஆனால் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘ ஆம்பளையும் ஆம்பளையும் சேர்ந்தால் எப்படி புள்ளை பொறக்கும்? நாமும் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, அவங்களும் மத்தியில் ஆளுங்கட்சி. ரெண்டு பேர் மீதும் மக்கள்கிட்ட கொஞ்சம் அதிருப்தி இருக்கு. அதுவும் பிஜேபி மீது மக்கள்கிட்ட கடுமையான எதிர்ப்பு இருக்கு. அவங்களோட கூட்டணி வைப்பது எப்படி சரியாக இருக்கும். கொஞ்சம் வெய்ட் பண்ணி பார்ப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், ஆடிட்டர் குருமூர்த்தி ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘ரொம்பவும் இழுத்துட்டு இருந்தீங்கன்னா 48 மணி நேரத்துல உங்களுக்கு பாடம் கத்துக் கொடுத்துடுவோம். அதிமுகவுல இருக்குற அத்தனை அமைச்சர்களும் எங்கே சொத்து வெச்சிருக்காங்க? பினாமி யாரு ? என எல்லா விபரங்களும் இப்போ சென்ட்ரல் கவர்ன்மென்ட் கையில் இருக்குது. கூட்டணி இல்லைன்னு சொன்னால் 48 மணி நேரத்தில் ரெய்டு வருவாங்க...’ என இடையில் பேச வந்தவர்களிடம் காட்டமாகவே சொல்லி இருக்கிறார். இந்த தகவல்கள் அத்தனையும் எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்கிறது. அதன் பிறகே அவசரமாக ஓகே சொல்லியிருக்கிறார். அதை, வைத்திலிங்கம் வாயால் சொல்லவும் வைத்திருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “ திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறதா இல்லையா என்பது பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதிக்கப்படுகிறது. சிறுத்தைகளை கழட்டிவிட்டது திமுக எனவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாமக போவது உறுதியாகிவிட்டதால், திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் இருக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறாராம். அதனால் எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் சிறுத்தைகள் இருப்பார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.” என்பதுதான் அந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக