வியாழன், 21 பிப்ரவரி, 2019

இட ஒதுக்கீடும்.. நீங்களும்.. உங்கள் நாணயமும்..

Kumaran Karuppiah : என்ன இருந்தாலும் சமூகத்தில் சாதியால் உயர் பிரிவினர் மே வர கூடாதுன்னு நேர்த்தியா வடிவமைச்சு அவர்களுக்கான தேவைகளை தன்னிறைவு செய்துள்ளார்கள்..
எப்போதுமே கிரேட் தான்.. தனக்கு யார் நல்லது செய்யறாங்க.. தங்கள் வளர்ச்சிக்கு எது சரியா இருக்கும் கரெக்ட்டா பார்ப்பாங்க.. நாடோ மக்களோ ஒரு பொரு‌ட்டே இல்லை.. வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதத்திற்கும் புதிய புதிய விழாக்கள் உருவாக்கி, தனது வருமானத்திற்கான இடத்தை வேறு யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது என்ற வகையில் நிறைய சாதி பேதங்களை புகுத்தி உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கங்க, எங்கள் பக்க
பல உயர் சாதியினருக்கு அதிகம் திமுகவை பிடிக்காது.. அந்த வகையில் அவர்கள் நடத்துற மீடியாக்கள் எல்லாமே திமுகவை எதிர்க்கும்.. மக்கள் மனதில் திமுக எதிர்ப்பை மீண்டும் மீண்டும் விஷமாய் பல பொய்களை சொல்லி விதைக்கும்... அவர்கள் பக்க நியாயப்படி அது சரி தான்.. ஏகபோகமான அவர்களின் வாய்ப்புக்கள் திடீரெனெ BC MBC SC ST என மக்கள் தொகைக்கேற்ப தனித்தனியாக இட ஒதுக்கீடு கொடுத்து, எல்லோரும் ஒன்று என்று சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வந்து திமுகவை எதிர்ப்பது கண்டிப்பாக சரியே...

ஆனால் அவர்களை தவிர மற்றோர் சமூக நீதி கொள்கையால் கல்வியை, வேலை வாய்ப்பை பெற்றவர்கள் சிலரும் திமுகவை எதிர்ப்பது தவறு இல்லையா?? பாமக கேட்டுக் கொண்டதும் வன்னியருக்கு MBC கொண்டு வந்து அவர்கள் வாழ்க்கை தரம் உயர வழி வகை செய்த கட்சி, செழியன் அவர்கள் கேட்டுக்கொண்டதும் கொங்கு வேளாள கவுண்டரை BC பிரிவில் சேர்த்து மாற்றமும் ஏற்றமும் கொடுத்த கட்சி, இங்கு யார் தெரியுமா? திமுக தான்.. அதை முதலில் உணருங்கள்..
இட ஒதுக்கீடு என்றால் அது தலித்துக்கு மட்டுமே என உங்களில் பலர் நினைக்கிறீர்கள்.. SC ST பிரிவிற்கு 10% தான், BC யில் இருக்கும் உங்களுக்கு 30%, MBC பிரிவிற்கு 10% என்பதை மறக்க கூடாது..
இப்படி உங்களின் வாழ்வை மலரச்செய்த திமுகவை, அவர்கள் எதிர்க்கலாம், ஆனால் அதை அனுபவிக்கும் உங்களில் சிலர் எதிர்ப்பது எப்படி பார்த்தாலும் நியாயமே இல்லை..
உங்களின் கண் எதிரே உங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதும் உங்களில் சிலருக்கு தெரியல.. நமக்கு எது சரி, நமக்கானவர்கள் யார் என்றும் உங்களில் சிலருக்கு புரியல..
இதுவரை அறியாமல் புரியாமல் இருந்தாலும் இனியாவது அறிந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக