ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கமல் ;சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன்

சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன் என கமல் பதிலடி! zeenews.india.com/tamil: சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டுதான் வருவேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அரசியல் மாணவர்களுக்கு வேண்டாம் என்று சொல்வது மடத்தனம் என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் சென்ரலிஸ்ட். ஜாதியை சொல்லிக்கொள்வதில் சந்தோசப்படாமல் இருங்கள். அங்கிருந்துதான் கலவரம் தொடங்குகிறது. தமிழன் என்பது விலாசம். தகுதி அல்ல. என்ன செய்தோம் என்பதுதான் தகுதி.
சினிமாலயும் இருக்கீங்க, அரசியலுக்கும் வறீங்க என்று கேட்கிறீர்கள். ஓட்டான்டிதான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தீர்களானால் சுரன்டிவிடுவார்கள்.

முழு நேர அரசியல்வாதியென்று சொல்லிக்கொள்பவர்கள் திருட்டு பயல்கள். நாலு சினிமா பன்னும் இடத்தில் ஒரு சினிமா பன்னிக்கொண்டிருக்கிறேன். அது என் இழப்பு. அதுதான் அரசியலுக்கான என் பங்களிப்பு. இத சொல்லிதான் கட்சிக்கு நிதி திரட்டுவேன். என் பங்களிப்பை செய்து விட்டேன். உங்கள் பங்களிப்பைக் கேட்பேன். நான் சட்டசபையில் சட்டைய பிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன்.
அப்டி கிழிஞ்சு போனாலும் வேற சட்ட மாத்திக்கிட்டு வெளில வருவேன். ஐயப்பனின் டி.என்.ஏவிலேயே பெண்கள் இருக்கிறார்கள்.  நிறையபேர் படம் பார்க்க வந்தால் எனக்கு சந்தோஷம்.
அதுபோல நிறைய பேர் வந்தால் ஐயப்பனும் சந்தோஷப்படுவார்.
டெல்லியில் எவன் வந்தாலும் அது தமிழகத்தைப் பாதிக்கும். நான் அங்கு போனால் தமிழகம் பாதிக்கப்படாது. அதற்காக நான் போக வேண்டும். இத்தனை வருடம் கிராம சபை இருப்பது உங்களுக்கு தெரியாதா? நேற்று வந்த சின்ன பயல் செய்ததும் காப்பி அடிக்கிறீங்க? வெக்கமா இல்ல உங்களுக்கு?
மீசையை முறுக்கி தொடையை தட்டிவிட்டு கோதாவில் இறங்கமாட்டேன் என்று சொன்னால் மதிக்கமாட்டார்கள். அதேபோல கட்சியைத் தொடங்கிவிட்டு அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லக்கூடாது. புது ஷீவை மாட்டிக்கொண்டு கூட்டணி எனும் கருப்பு குட்டைக்குள் இறங்கி அழுக்காக்கிக் கொள்ளமாட்டேன்.
தி.மு.கவை விமர்சிக்க தி.மு.கவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே விமர்சிக்கிறேன். டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வைப்பதாக வரும் தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். எனக்கு அல்ல’ என்று தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக