சனி, 9 பிப்ரவரி, 2019

நான் உயர்ந்த சாதின்னு காட்டிகிற பூணூலும் நான் நல்ல பெண் அப்டின்னு காட்டிகிற புர்க்காவும் ஒன்று தான் .

Devi Somasundaram : Burha is not right to choose ..
ரஹ்மான் மகள் மேடையில் தன் முகத்தை மூடி போட்ட உடை தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகள்...இந்து மதம் என்ற பெரும்பான்மை மதத்தினராலும், பகுத்தறிவுவாதிகளாலும் , ஒடுக்கபட்டவர்கள்னு சொல்லப்படும் தலித்தியவாதிகள் வரை ஏன் சில முற்போக்கு இஸ்லாமியர்களாலும் அனைவராலும் தாக்க படும் இஸ்லாத்தை நாமும் நம் பங்குக்கு அடிக்க வேண்டாமேன்னு அமைதியா இருப்பது பழக்கம்..
யார் ஒடுக்கபடுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்கும் நிலை காரணம்...ஆனாலும் சில விஷயத்தை பேசாமல் போவதும் சரி இல்லை என்பதால் இதை எழுத வேண்டி வந்தது . ரஹ்மான் சகோதரி அல்லது மகள் என்ன உடை போடனும் என்பதை நாம் முடிவு செய்ய கூடாது தான்...ஆனால் புர்க்கா அடிமைதனத்தில் அடையாளம் என்பதை சொல்லி தான் ஆகனும்...ரஹ்மான் தன் மகளை புர்க்கா போடுன்னு நிர்பந்திக்கல . புர்க்கா போடாதன்னும் நிர்பந்திக்க இயலாது ..அது விமர்சனத்திற்குரியது இல்லை தான்... ஆனால் கதிஜா புர்க்கா அணிந்ததை அவரின் பகுத்தறிவற்ற தன்மைன்னு பேசாம கடக்க இயலாது ..
எல்லாத்தையும் ரைட் டூ சூஸ்ன்னு எடுக்க இயலாது ...புர்க்கா ரைட் டூ சூஸ்ன்னா பூணூலும் ரைட் டூ சூஸ் தான் .சாதியும் ரைட் டூ சூஸ் தான்.. ஒரு பெண் புர்க்கா அணியும் போது தன் குடும்பம் சார்ந்த ஆணையும் அவமான படுத்துகிறாள்ன்னு தான் அர்த்தம் .

நான் உயர்ந்த சாதின்னு காட்டிக்க அணியும் பூணூலும் நான் நல்ல பெண் அப்டின்னு காட்டிக்க அணிய படும் புர்க்காவும் ஒன்று தான் ..அடுத்தவ்ரை ஏளனபடுத்தும் அடையாளம் .
இந்த விஷயத்தில் ரஹ்மான் மீது விழுந்து பொறாண்டுவது எத்தனை மடத்தனமோ அத்தனை மடத்தனம் அதை ரைட் டூ சூஸ்ன்னு சொல்வதும்..
அவரின் பிரைவஸிகாக புர்க்கா போட்டார் என்பதும் அசட்டு வாதம்...பெண் அடுப்படியில் இருப்பதே பாதுகாப்பானது என்ற அதே பிற்போக்குவாதம்.. ரஹ்மான் மாதிரி ஒரு செலிப்ரிட்டி மகள் பாதுகாப்பா இருக்க இயலாத அளவு தமிழ் சமுகம் மோசமா ஆகலன்னு நினைக்கிறேன்... ஸ்ருதி ஹாசன் லாம் இதே மண்ல தான் பாதுகாப்பா வாழ்ந்துட்டு இருக்காங்க.
கதிஜாகள் மாறட்டும்...புர்க்கா அடிமையின் சின்னம் சகோதரி ..

Anbarasan Thanjai Anbarasan Jayaraman : எப்போதும் இடையில் மதம் மாறியவர்கள்தான் அந்த மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்ணைமூடிக்கொண்டு அதை கட்டிகாக்க துடிப்பார்கள், அதில் ஏஆர் ரஹ்மான் மகள் மட்டும் விதிவிலக்கா என்ன? நிகழ்ச்சி நடந்தது ஆப்கானிஸ்தானோ அரபு தேசமோ அல்ல நம்ம மும்பைதாங்க! எவ்வளவுதான் அப்பன் கோடிஸ்வரனாக இருந்தாலும் மதத்தை காரணம் காட்டி ஆண்களுக்கு பொத்திவச்ச பூட்டிவைத்த அடிமைதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக