செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

ஆதிவாசிகள் .. ஆங்கிலேயன் கூட செய்ய துணியாத அக்கிரமம் .. காடுகளை வளைத்துபோடும் காபறேட்டுக்களுக்கு துணை போகும் உச்சநீதிமன்றம்


சாவித்திரி கண்ணன் : நம்மை அடிமையாக வைத்திருந்த பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் கூட நினைத்து பார்த்திராத ஒரு அக்கிரமத்தை உச்ச நீதிமன்றத்தை வைத்து அரங்கேற்றுகிறார்கள்!
இந்தியக் காடுகளில் வரலாறு எழுதப்படாத காலகட்டத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளை ’’பட்டா இல்லாதவர்கள்’’என்று பட்டியலெடுத்துசொல்லி, ஒரு மாத கெடு கொடுத்து வெளியேற்ற ஆணையிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்..!
ஏன் பட்டா? எதற்கு பட்டா? அந்த பட்டா அவன் நாக்கு வழிக்க கூட லாயக்கற்றது....!.
வெள்ளைக்காரனிடம் அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கேட்ட கேள்விகளே இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்!

காடுகள் இல்லையல் நாடுகள் இல்லை!
அந்த காட்டுக்கு சம்பளமில்லாத காவலர்களாக- காலமெல்லாம் - தலைமுறை,தலைமுறையாக வாழ்ந்து கொண்டிப்பவர்களை விரட்டுவதா?
சுதந்திரம் பெற்ற போது இருந்த இந்திய காடுகளின் நிலப்பரப்பில் இன்று சரிபாதி ’’ஸ்வாகா’’ செய்யப்பட்டுள்ளதே..., அதற்கு அங்கு குடியேறி கொள்ளையடித்தவ்ர்களுக்கு நீங்கள் தந்த ’’பட்டா’’ தானே பாதுகாப்பு தந்து காப்பாற்றியது.!
காடுகளில் வாழும் பழங்குடிகள் வனத்தையே திறந்த வெளிக் கோயிலாகவும்,மரங்களையே தெய்வமாகவும் வணங்குபவர்கள் ..!
அவர்கள் இயற்கையின் உண்மையான பாதுகாவர்கள்!
தேனீக்கள் இல்லையெனில் 80% பயிர்களில் மகரந்த சேர்கையே இல்லை.!
’’அந்த தேனீக்கள் மலர்களில் அமர்ந்து தேன் உண்ண வரி செலுத்த வேண்டும்..,.இல்லையெனில் அனைத்து தேனீக்களும் அழிக்கப்படும்..’’ என்று ஒரு அரசன் சொல்வானென்றால்...,
தேனீக்களின் அழிவுக்குப் பிறகு மனிதனுக்கு உணவில்லாமல் போகும்!
மிக விரைவில் மனித இனமே அழிந்து போகும்!
ஆதிவாசிகள் விவகாரத்தையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன்!

1 கருத்து: