புதன், 6 பிப்ரவரி, 2019

சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை!


சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை!
மின்னம்பலம் :தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி நேற்று (பிப்ரவரி 5) ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 5) இரவு 9 மணியளவில் அவர் சீலிங் பேனில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் செகந்திராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவல்துறையினர் தற்கொலை கடிதம் ஒன்றையும் மொபைல் போன் ஒன்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தோல்வி ஜான்சியின் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சூர்யா என்பவரோடு ஆறு மாதங்களுக்கு மேலாக ஜான்சி பழகிவந்துள்ளார். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது காதலர் சூர்யா தற்போது தலைமறைவாகியுள்ளார்.

ஆந்திராவின், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள வடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி சமீபத்தில் நிறைவுபெற்ற பவித்ரா பந்தம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக