செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

அற்புதம் அம்மாள் :ஏழு பேரையும் விடுவித்தால் அது பாஜக அதிமுகவிற்கு மிகப்பெரிய ஓட்டு வங்கியாக மாறும்

 ஆலஞ்சியார்  :  ஏழு பேரையும் விடுவித்தால் அது பாஜக அதிமுகவிற்கு
2014 மற்றும் 2016 தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு பயன்பட்டார் .. ஜெயலலிதா என் மகனை விடுதலை செய்வாரென்று அற்புதம்மாள் சொன்னார்
ஆனால் பலனேதுமில்லை
பாவம் மீண்டும் அதிமுக, பாஜகவுக்காக பேசுகிறார் .. அவர் மீது இரக்கம் தோன்றவில்லை பரிதாபம் தோன்றுகிறது .. தன் மகனுக்காக தொடர்ந்து சட்டபோராட்டத்தை நடத்தி பலனேதுமில்லை என்றவுடன் எப்படியேனும் வெளிகொண்டுவந்துவிட வேண்டுமென்பதற்காக ஜெயலலிதாவிற்கு தேர்தல் நேரத்தில் பயன்பட்டார் அவர்மீது கோபம் வரவில்லை மாறாக பாவம் எஞ்சிநின்றது ..ராஜீவ் கொலை நடந்த போது யாருமே குற்றம்சாட்டபட்டவர்களுக்காக வாதாட முன்வராதபோது சட்டரீதியான உதவிகளை செய்தது திராவிடர் கழகம் .. முதன்முதலில் துரைசாமிதான் நளினிக்காக வாதாட முன்வந்தார் ..
அதன் பிறகு பிரபாகரனுக்கு தாக்கீதை பெரியார் திடலுக்கு அனுப்பியது சிபிஐ..
திராவிட கழகம் அன்றைக்கு இவர்களுக்காக வாதாட வந்ததின் பின்னில் கலைஞரின் கரிசனம் இருந்ததெல்லாம் இன்றைக்கு ஈழம் பேசி பிழைப்போருக்கு தெரியாது ..

..
தொடர்ந்து அனைத்துகட்சியினரும் வலியுறுத்தியும் எழுவரின் விடுதலை காலதாமதமாவதின் பின்னணி என்ன .. எதற்காக விடுதலை செய்ய அரசு மறுக்கிறதென்ற யாருமே கேட்பதில்லை எழுவர் விடுதலையை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்களே தவிர வேறெதும் நடந்ததாக தெரியவில்லை .. 2014..2016 தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து விட்ட அறிக்கை காற்றோடு போய்விட்டது இலை மலர்ந்தால் ஈழம் மலருமென்ற அறிவிலிகளின் கூச்சலைப்போல இப்போதும் பாஜக அதிமுகவிற்கு மிகப்பெரிய வாக்குவங்கியாக மாறுமென என்று சொல்வதும் இயலாமையில் நிற்கும் தாயின் நிலை நமக்கு புரிகிறது .. இருபத்தைந்தாண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன் மகனின் தவறுக்காக எப்படியேனும் அவனை வெளிகொண்டுவந்துவிட வேண்டுமென்று தவிக்கும் தாயின் நிலை .. இப்போது கூட தவறை ஒப்புகொள்ளாமல் செய்யாத தவறுக்காக தண்டனை என்றே கதைப்பதும் .. கடைசிவரை புலிகள் தங்கள் நிலைபாட்டை வெளியே சொல்லாமல் மாட்டிக்கொண்டவர்களை பற்றி அக்கறை கொள்ளாததும் .. அதுவொரு "துன்பயியல்" சம்பவமென சொல்லி கை கழுவியதும் கடைசிவரை "அப்பாவிகள்" (அப்படிதான் சொல்கிறார்கள்) சிறையிலே இருக்க நேர்ந்ததும் இப்போதெல்லாம் யாரும் மறந்துகூட பேசுவதில்லை
..
ராஜீவ் கொலை நடந்த நேரத்தில் திமுகவினர் மீது விழுந்த சந்தேகநிழல் மெல்ல நகரும் வரை திமுகவை குறிவைத்து தாக்கியதும் அதனால் திமுக இழந்தவைகள் ஏராளம் .. இன்றைக்கு ஈழம் பேசி பிழைப்போருக்கு தெரியாது .. எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலேயே ஈழ அகதிகளை நேசத்தோடு வாழ்வளித்தவர்கள் திமுகவினரென்று .. கீழ்தஞ்சையில் அன்றைய மாவட்ட செயலர் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் செய்த உதவிகள் அதனால் எந்தளவு பாதிப்பு நேர்ந்ததென்பதெல்லாம் இப்போது ஈழம் கதைப்போருக்கு தெரிய வாய்ப்பில்லை .. எங்களுர் கிளை செயலாளர் ராஜேந்திரனோடு கோடியக்கரையில் நாள்கணக்கில் காத்திருந்து .. தேசிய தலைவரையும் அவரது சகாக்களையும் பத்திரமாய் கொண்டு சேர்த்தெல்லாம் கே.சி.மணி அண்ணன் சொன்னார் என்பதற்காகதான் . திமுகதான் ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தது .. புலிகளால் திமுக பயனடைந்ததைவிட பழி சுமந்தது தான் அதிகம் ஆட்சியை கூட இழந்தது .. ராஜீவ் கொலைக்கு பிறகு தமிழக மக்களிடையே பெரியதொரு ஆதரவோ கருணையோ கிடைக்கவில்லை ஆனால் சிலர் ஈழத்தை சொல்லிப் பிழைக்க வழி பிறந்தது ..
..
இப்போது கூட அற்புதம்மாள் கருவியாக பயன்படுத்தபடுகிறார் என்ற கவலைதானே தவிர ..
பேரறிவாளன் உட்பட எழுவரும் விடுதலை ஆகவேண்டுமென்பதில் மாற்று கருத்தே இல்லை இப்போதும் ஏமாற்றபடுவார் என்று நினைக்கிற போது மனம் வலிக்கிறது .. அந்த தாயின் இயலாமை தகுதியில்லாதவர்களிடம் கூட யாசித்து நிற்க வேண்டி வந்ததே என்ற ஆதங்கமே மேலிடுகிறது ..
..
எழுவர் விடுதலை
..
ஆலஞ்சியார்
மிகப்பெரிய ஓட்டு வங்கியாக மாறும் என அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக