திங்கள், 11 பிப்ரவரி, 2019

காணாமல் போன பள்ளிமாணவி சரிதா எலும்பு கூடாக .. பலாத்காரம் செய்து கொலையா? போலீஸ் விசாரணை!

s
nakkheeran.in - aravindh : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலூக்கா புதுவெங்கடாபுரத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி, எல்லாம்மாள் தம்பதியின் மகள் சரிதா.   இவர் பக்கத்து கிராமமான கீச்சளம் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். sகடந்த 2018 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காலை வழக்கம் போல சரிதா பள்ளிக்கு சென்றார்.   சரிதாவின் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.    வழக்கமாக பள்ளிக்கு செல்லும் போது,  தங்கள் வீட்டில் கறந்த மாட்டுபாலை எடுத்துக்கொண்டு போய்,  பள்ளிக்கூடம் அருகே உள்ள  கீச்சளத்தைச்சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டில் கொடுத்துவிட்டு செல்வது சரிதாவின் வழக்கம்.   அதே போல் சம்பவத்தன்று  புத்தக பையுடன் பாலை எடுத்து சென்ற சரிதா மாலை  வீடு திரும்பவில்லை.



 இதையடுத்து சரிதாவின் பெற்றோர் பாஸ்கரனை கேட்டபோது, சரிதா இன்று பால் கொண்டுவரவில்லை என்று அவர்களிடம் கூற,  உடனே பள்ளியில் விசாரித்தபோது,  அன்று காலை முதலே பள்ளிக்கு வராததும் தெரியவந்தது.    நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சரிதாவின் பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்திவர,  சரிதாவின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

s
 5 மாதங்கள் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.    இந்தநிலையில் ஜனவரி 11 தேதி மாலை கீச்சளம் கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி சுரேஷ் என்பவர் வேலை முடிந்து கீச்சளம் ஏரி ஓடை அருகே பள்ளி சீறுடையில் எலும்பு கூடுடன் கிடந்ததை பார்த்து அதிர்தார்.    உடனே சுரேஷ் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தர,   விரைந்துவந்த போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் பிரேதத்தை கைபற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் சரிதாவின் பெற்றோர் சரிதாவை அடையாளம் காட்டினர்.   இருப்பினும் எலும்பு கூடாக  உள்ளதால் டி.என்.ஏ மரபணு சோதனை செய்யவுள்ளனர்.   சம்பவம் தொடர்பாக சரிதா பால் எடுத்து சென்ற பாஸ்கரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இது தொடர்பாக நாம் மாவட்ட எஸ்.பி பொன்னியிடம் பேசியபோது,   " விசாரணையை தொடங்கியுள்ளோம்.  விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்’’ என்று முடித்துக்கொண்டார்.

மாணவி சரிதா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக