திங்கள், 4 பிப்ரவரி, 2019

விருதுநகர் இயற்கை உபாதை .. பஸ்சை நிறுத்தாத டிரைவர்.. கீழே குதித்து பெண் படுகாயம்!

srivilliputhur woman jumps from running bus and injuredtamil.oneindia.com - karthikmahaligam-lekhaka.: இயற்கை உபாதையைத் தணிக்க பேருந்தை நிறுத்தத்தால் கீழே குதித்து பெண் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை உபாதைக்காக பஸ்ஸை நிறுத்துமாறு கூறியும் பஸ்சை டிரைவர் நிறுத்ததால் அப்பெண் கீழே குதித்து விட்டார். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். ஆட்டோ ஓட்டுனர் செல்லதுரை என்பவரது மனைவியான இவர் கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுவலியில் அவதிபட்டுவந்ததாக கூறபடுகிறது.


தேனி மாவட்டம் ஆன்டிபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை ஆன்டிபட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்தில் திரும்பும் வழியில் தொடர்ந்து வயிற்றுவழி காரணமாக அவதிபட்டதாகவும் கூறபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லுபட்டி பகுதியில் இருந்து இயற்கை உபாதையைக் கழிக்க பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் டிரைவர் பஸ்ஸை நிறுத்தவில்லை. இதனால் அழகாபுரி என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது அந்தப் பெண் பேருந்தில் இருந்து குதித்தாக கூறபடுகிறது. படுகாயம் அடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுவருகிறது.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக