திங்கள், 11 பிப்ரவரி, 2019

மெட்ரோ ரயிலில் செல்ல இன்று இலவசம்

THE HINDU TAMIL : தொடக்க நாளில் முதல் மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகள். படங்கள்: ம.பிரபு மெட்ரோ ரயிலில் செல்ல இன்று இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரிக்கும். 40 நிமிடங்களில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டைக்கு செல்லலாம்.
மெட்ரோ ரயில் பயண வசதியை மக்களிடம் கொண்டு செல்ல இன்று இரவு (11-ம் தேதி) வரையில் மக்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம். விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக