புதன், 20 பிப்ரவரி, 2019

பொட்டி வேணும், மதுரை சேலம் வேணும்.. கூடுதல் சீட் வேண்டும்.. தேமுதிக பிடிவாதம்.. இதுதான் பிரச்சினை


tamil.oneindia.com/n: சென்னை: வீடு வரைக்கும் போய் பேச்சுவார்த்தை நடத்தியாச்சு... அப்புறம் ஏன் தேமுதிக கூட்டணி இழுபறியாக இருக்கிறது என்பதுதான் குழப்பமாக உள்ளது.
கூட்டணி அறிவிப்புக்கு செவ்வாய்கிழமை, நல்ல நாள்.. மாசி பவுர்ணமி என்று நாள் குறிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அதிமுக-பாஜக உள்ளிட்ட கூட்டணி பற்றின இறுதி முடிவுகள், பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ்கோயல் நேற்று சென்னை வந்து, ஒரு இடத்தில் பேச்சு நடத்த இருந்தவர், திசை மாறி வேறு பக்கம் போனார். அங்காவது தேமுதிகவுடன் பேசி விஷயம் முடிவாகும் என்று நினைக்கப்பட்டது.
ஆனால் விஜயகாந்த் வீட்டுக்குள் சென்ற பியூஸ் கோயல் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார், வீட்டு வாசலில் சுதீஷூடன் 5 நிமிஷம் தனியா பேசிவிட்டு திரும்பவும் உள்ளே சென்றார். கடைசியில் "விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை, அதான் பார்க்க வந்தேன்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார். தேர்தல் செலவு தேர்தல் செலவு ஆனால் இன்னமும் தேமுதிகவுக்கு கூட்டணி இழுபறி நீடிக்கிறது. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன. தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதுதான் முதலாவது விஷயம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அதிமுக, வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, கூட்டணியில் இடம் பெறும் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கும், பணம் வழங்குவார். எல்லா செலவுகளையும் அவரே கவனித்து கொள்வார்.


 அந்த பாணியில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபோதே, "பாஜகவில் கூட்டணி வேண்டுமென்றால் இன்னென்ன சலுகைகள் தரவேண்டும் என்று பிரேமலதா, சுதீஷ் மூலம் தகவலை சொல்லி அனுப்ப, விஜயகாந்த் வரட்டும் பார்த்துக்கலாம் என்று பதில் சொல்லி விட்டதாக கூறப்பட்டது. கூடுதல் விவரங்கள் கூடுதல் விவரங்கள் இப்போது ஒரு பெரிய தொகை பாமகவுக்கு கைமாறியதாக தகவல்கள் தீயாக பரவுகின்றன. ஒரு தொகுதிக்கு இவ்வளவு என மிகப் பெரிய தொகையை அதிமுக தந்துள்ளதாகவும் கூடுதல் விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த காரணத்தை காட்டியே தங்களுக்கும் தேர்தல் நிதி கேட்கிறதாம் தேமுதிக. வட மாவட்டங்கள் வட மாவட்டங்கள் மற்றொரு காரணம், தொகுதி பங்கீடுகள்தான். அவங்களுக்கு மட்டும் 7, எங்களுக்கு எவ்வளவு என்பதிலும், எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் ராமதாசுக்கு இருப்பதை போலவே விஜயகாந்த்துக்கும் சில இடங்களில் மவுசு இருப்பதால், குறிப்பிட்ட தொகுதி வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருக்கிறதாம்.

பிரேமலதாவை நிறுத்த மதுரையை கேட்டதாகவும் அதற்கு அதிமுக மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. அதேபோல, போன முறைதான் சேலம் கிட்ட வந்து கைநழுவி போய்விட்டது, இந்த முறையாவது சேலத்தை தனக்கு தர வேண்டும் என்று சுதீஷ் கேட்டார் என்றும், ஆனால் தனது சொந்த தொகுதி என்பதால் அதனை தர முடியாது என்று முதல்வர் சொல்லி விட்டதாகவும் செய்திகள் வந்தன. இப்படி, தேமுதிக கேட்கும் தொகுதிகளுக்கெல்லாம் சில காரணங்களுக்கு அதிமுக தரப்பு நோ சொல்லி கொண்டிருப்பதாலும் இந்த கூட்டணி இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

 எனவே இந்த 2 பிரச்சனைகளையும் பியூஷ் கோயல் எப்படி சமாளிப்பார்? விஜயகாந்த்தை (அதாவது பிரேமலதா - சுதீஷை) எப்படி தன் வழிக்கு கொண்டு வருவார்? கூட இருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் தருவார் என்பதையெல்லாம் இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக