புதன், 20 பிப்ரவரி, 2019

சத்திரபதி சிவாஜி மதசார்பு அற்றவர் .. காவிகளின் அல்ல காவிய தலைவன்.


ராஜா ஜி : முஸ்லிம் சமுதாயத்தினரே - வீரசிவாஜியை தூக்கிப் பிடியுங்கள், அவர் வரலாறை சொல்லுங்கள் - இந்துத்துவ கும்பல் சிவாஜியை தூக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடும்!
நேற்று சத்ரபதி வீரசிவாஜியின் 19-2-1630 பிறந்தநாள், அவரை முஸ்லிம்களுக்கு எதிரானவராக இந்துத்துவ அமைப்புகளால் காட்டப்படுகிறார் உண்மையில் அவரின் வரலாறு முழுமையாக சொல்லப்படவில்லை என்பதே உண்மை. சிவாஜி என்பவர் ஔரங்கசீப்பை எதிர்த்தவர்.. முஸ்லீம்களுக்கு எதிராகக் களமாடியவர்..
இந்துக்களின் தலைவர்..
இதைத்தான் நமது மூளையில் ஏற்றியுள்ளார்கள்!
உண்மையான வரலாறு: சிவாஜியின் படையில் மெய்க் காப்பாளராக இசுலாமியர்கள் இருந்தனர்; படைத் தலைவர்களாக, நம்பிக்கை மிக்க அரசியல் தூதர் களாக இருந்தனர் என்ற பட்டியலை கோவிந்த் பன்சாரே சொல்கிறார் அதன்படி...
வீரசிவாஜியின் மெய்க்காப்பாளர் பெயர் மாதாரி திகடர் என்ற முஸ்லிம்தான் -(எத்தனை முறை இந்த முஸ்லிம் இந்து சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருப்பார்)

மொகலாய மன்னர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய தூதரின் பெயர் ஹைதர்- (விலைபோகாத நம்பிக்கையான முஸ்லிம் தூதர் )
சிவாஜியின் பீரங்கிப்படை தளபதியின் பெயர் இப்ராகிம்கான்.(பீஜப்பூர் கோல்கொண்டா அரசுகளை பிடித்தது இந்த முஸ்லிம் தளபதியோடுதான்)
கப்பற்படை தளபதியின் பெயர் தவுலத்கான்.
(கொங்கன கடற்பகுதியில் மொகலாயர்களை எதிர்த்து வெற்றிபெற்றது இந்த முஸ்லிம் தளபதியோடுதான்)
1630 இல் பிறந்து 1680- இல் மறைந்தார். தன்னுடைய 16-ஆம் வயதிலேயே மன்னரானார் என்று சொல்வதெல்லாம் பொய்.
1674 இல் தான் மன்னராக முடிசூட்ட அனுமதிக்கப்பட்டார்.
சூத்திரன் படைக்கு தலைமை தாங்கலாம் அவன் மன்னன் ஆகக் கூடாது என்ற வர்ணாசிரமம்தான் அவரை தடுத்தது.
சிவாஜிக்கு நேர்ந்த கதையை நம் பேரறிஞர்தான் தன்னுடைய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் மூலம் வெளிக் கொணர்ந்தார்.
அதுவரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி யாருக்குமே தெரியவில்லை.
வர்ணாசிரமத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பார்ப்பன கூட்டம் இன்று சிவாஜியை முன்னிறுத்துகின்றன.
வரலாறுகள் கொடுமையானவை.
வரலாறு மறந்தவன் திக்கற்று நிற்பான். திசை மாறிப்போவான்.
புளுகர்களிடம் கவனமாக நிற்போம்.
யார் இந்த சிவாஜி?’ என்ற ஒரு புத்தகத்தை மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், எழுத்தாளர் எழுதினார்.
சத்ரபதி சிவாஜியை பாசிச காவிக்கும்பல் இந்துக்களின் தலைவனாக முன்னிறுத்துகிறது. ஆனால், சிவாஜியைப் பற்றி நமக்கு எல்லாம் அண்ணா அவர்கள் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகம் மூலம் பாலபாடமே நடத்திவிட்டார்.
சிவாஜி இந்துக்களின் தலைவன் அல்ல என்று கோவிந்த பன்சாரே புத்தகம் எழுதினார்.
சிவாஜி என்பவர் காவிகளின் தலைவன் அல்ல; காவிய தலைவன்.
அதுபோல அவுரங்கசீப் படைகளில் தளபதி களாக இந்துக்கள் இருந்து இருக்கிறார்கள். இங்கே இந்துக்களும், அங்கே இசுலாமியர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து இருக்கிறார்கள்.
சிவாஜிக்கும், அவுரங்கசீப்பிற்கும் நடந்த போர் என்பது மதத்திற்கான போர் அல்ல; அது மண்ணிற் கான போர். இந்த மண்ணை யார் ஆக்கிரமிப்பு செய்வது என மண்ணிற்கான நடந்த போரே தவிர மதத்திற்கான போரே அல்ல என்பதை பல்வேறு ஆதாரங்களோடு அந்த புத்தகத்தில் கோவிந்த் பன்சாரே எழுதினார். அவரின் புத்தகம் 5 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.
இவர்களைப் பற்றி நாடு முழுவதும் தெரிந்தது; மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் கோவிந்த் பன்சாரே அவர்களைச் சுட்டுக் கொன்றது பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக