புதன், 20 பிப்ரவரி, 2019

திமுக காங்கிரஸ் கூட்டணி பேரத்தில்.. மம்தாவிடமும் ஸ்டாலினிடம் மென்மையான அணுகுமுறை ...ராகுல் ..

மின்னம்பலம் .“திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை கனிந்திருக்கிறது. சீட் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் கனிமொழிதான் டெல்லியில் இருந்தார். காங்கிரஸ் தரப்பில் எடுத்த எடுப்பில் 15 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா கேட்கப்பட்டது.
இந்த தகவலை கனிமொழிதான் ஸ்டாலினிடம் சொல்லியிருகிறார். ‘8-க்கு மேல கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க...’ என ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இதை அப்படியே கனிமொழியும் டெல்லியில் சொல்லி இருக்கிறார். 15 படிப்படியாக குறைந்து 12 மற்றும் ஒரு ராஜ்ய சபாவில் வந்து நின்றிருக்கிறது. அந்த தகவலையும் கனிமொழிதான் ஸ்டாலினிடம் சொன்னாராம். அதன் பிறகுதான் ஸ்டாலினும் கொஞ்சம் ஏறி வந்திருக்கிறார். ‘ராஜ்ய சபா பற்றியெல்லாம் இப்போ பேச வேண்டாம். 10 சீட்க்கு ஓகே சொல்லுங்க...’ என சொன்னாராம்.
பேச்சுவார்த்தையில் இருந்த சிதம்பரம்தான் அதன் பிறகு ராகுலிடம் பேசியிருக்கிறார். ‘தமிழ்நாட்டுலயும் சரி, மம்தாகிட்டயும் சரி... சீட் பற்றியெல்லாம் அதிகமாக பேரம் பேச வேண்டாம். தமிழ்நாட்டுல எத்தனை சீட் கொடுத்தாலும் ஓகே சொல்லுங்க. அது ஜெயிச்சாலே போதும்..’ என சொன்னாராம் சிதம்பரம்.
அதை ராகுலும் சற்று யோசனையுடன் ஏற்றுக் கொண்டு ஒ.கே சொல்லியிருக்கிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 சீட்டுக்கு ஓகே சொல்லப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான உறுதியாக தகவல்களை தெரிந்த பிறகுதான் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் வேணுகோபால் இருவரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள். இன்று மாலையில் சென்னை வந்த அவர்கள் இரவு ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள். டெல்லியில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி காங்கிரஸுக்கு 10 சீட்டுகள் என்பது முடிவாகியிருகிகிறது ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக