திங்கள், 11 பிப்ரவரி, 2019

தம்பிதுரை: பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி .வீடியோ . நாடாளுமன்றத்தில் பாஜகவினர் தொடர் அமளி


tamil.oneindia.com :பாஜகவிற்கு எதிராக கொந்தளித்த தம்பிதுரை.. பேச்சை நிறுத்த சொல்லி பாஜக அமளி  
டெல்லி: பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்.பி தம்பிதுரை பேசிக்கொண்டு இருக்கும் போது பாஜகவினர் அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
இன்று லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கியது. வரும் புதன் கிழமையோடு இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது. இந்த நிலையில் பட்ஜெட் மீது விமர்சனம் வைக்கும் வகையில் லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பேசினார். அவர் தனது பேச்சின் தொடக்கத்திலேயே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக மிக மோசமாக தோற்றுவிட்டது, தான் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக இதுவரை நிறைவேற்றவில்லை, என்று கடுமையாக விமர்சனங்களை வைத்தார்.
''பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது'' ''பணமதிப்பிழப்பால் பலரின் வாழ்வாதாரம் பாதித்தது'' ''மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது'' ''தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது'' என்று மிக கடுமையான வாதங்களை பாஜகவிற்கு எதிராக தம்பிதுரை லோக்சபாவில் வைத்தார்.


இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜகவினர் கொந்தளித்துப் போனார்கள். இதனால் தம்பிதுரையை உடனே பேச்சை நிறுத்த வேண்டும் என்று கத்தினார்கள். தம்பிதுரையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.
தம்பிதுரையை பேசவிடாமல் பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடாளுமன்ற அலுவல் சில நிமிடம் தடைபட்டது. அதன்பின், தம்பிதுரை ''நான் பேசுவதை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.. முழுதாக பேசி முடித்துவிட்டேன்'' என்று கூறிவிட்டு தனது இடத்தில் அமர்ந்தார்.
அதிமுக பாஜக கட்சிகள் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தம்பிதுரை இப்படி பேசி இருப்பது விவாத பொருளாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக