ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

ரஜினி : எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை ..தேர்தலில் போட்டி இடப்போவதில்லை

வெப்துனியா : வரும் மக்களைவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும்
ஆதரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டி இடப்போவதாக கூறியிருந்தார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல் வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். இதற்கிடையே வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி, களமிறங்க வாய்ப்பிருக்கிறது எனவும், அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவை நாடாளுமன்ற தேர்தலில் நான், எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலே தமது இலக்கு எனவும் கூறியிருக்கிறார். ரஜினி மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, படத்தையோ எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருக்கிறார். காவிரி பிரச்சனையை எந்த அரசு நிரந்தரமாக தீர்க்க வல்லதோ அதற்கே சிந்தித்து வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக