திங்கள், 18 பிப்ரவரி, 2019

காஷ்மீரில் கடந்த ஆண்டு மட்டும் 457 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர்

Swathi K : மோடியின் காஷ்மீர்: தகவல் 1 :
நம்ம 45 ராணுவ வீரர்கள் இறந்ததை பற்றி கவலைப்படும் இந்த நேரத்தில்.. அதை விட மோசமான தகவல் இது காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.. ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 2014ல் இருந்து கணிசமாக உயர்ந்துள்ளது.. சென்ற ஆண்டு மட்டும் 457 ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள்..
2014ல் இருந்து மாநிலத்திலும் (கூட்டணி), மத்தியிலும் பிஜேபி தான் ஆண்டு வந்து இருக்கிறது..
காஷ்மீரையும், ராணுவத்தையும் காப்பாற்ற முதலில் அனைவரும் ஒருங்கிணைத்து மோடியை வீழ்த்தவேண்டும்.. பாகிஸ்தான் மட்டுமே பிரச்சனையில்லை.. அதைத்தாண்டியும் நாம் யோஷிக்க வேண்டிய நேரமிது.. காஷ்மீர் மக்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான வளர்ச்சியும், உதவியும் செய்யாமல் எந்த அரசாலும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது..
The death of jawans in terror attacks has risen 220 percent in Jammu and Kashmir in the past five years, according to data from the South Asia Terrorism Portal. In 2018, 457 security personnel were killed in terror attacks compared to 179 in 2014.


- Swathi Kமோடியின் காஷ்மீர்: தகவல் 2
காஷ்மீரில் 2018ல் மட்டும் 614 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.. 2014ம் ஆண்டு 222.. ஒவ்வொரு வருடமும் கூடி 2018ல் 614யை தொட்டுள்ளது.. 2018ல் மட்டும் 457 ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள்..
மோடி, அருண் ஜெட்லீ, நிர்மலா என்று அனைத்து பிஜேபி அல்லக்கைகளும் பொய் மேல் பொய் சொல்லியுள்ளனர் மக்களிடம்..
கடந்த ஐந்து வருடம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்வது பிஜேபி அரசு.. இன்னும் காஷ்மீர் பிரச்சனைக்கு காந்தி, நேரு'ன்னு சொல்லி மக்களை முட்டாள் ஆக்க முடியாது..
உண்மையில் மோடி ஒரு அட்டக்கத்தி வீரர்.. தனது போலியான தேசபக்தியால் மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கிறார்.. அவரை எந்த நாடும் மதிப்பதில்லை.. இன்னும் சொல்லவேண்டும் என்றால் சீனா போன்ற நாடுகள் 2019ல் மோடி தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றன.. இந்திய உள்நாட்டு பிரச்சனைகள், பொருளாதார வீழ்ச்சி எல்லாமே ஏதோ ஒரு வகையில் சீனாவின் வளர்ச்சிக்கு உதவிக்கொண்டு இருக்கின்றது..
முதலில் காஷ்மீரையும், ராணுவத்தையும், இந்தியாவையும் மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.. இல்லையென்றால் அவர் தனது போலியான தேசபக்தியை வைத்து மக்களை முட்டாள் ஆக்குவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
குறிப்பு: கமெட்டில் உள்ள செய்திகளையும் படித்து செல்லவும்..
- Swathi K
Reference:
https://www.moneycontrol.com/…/in-5-years-death-of-jawans-i…
https://www.news18.com/…/from-uri-to-lethpora-death-trail-i…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக