வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

வேலைநிறுத்தம்.. 1,584 ஆசிரியர்கள் இதுவரை பணியிடை நீக்கம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1,584 ஆசிரியர்கள் இதுவரை பணியிடை நீக்கம் தினத்தந்தி :  ஜாக்டோ–ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சென்னை, ஜாக்டோ–ஜியோ சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்தவகையில் பள்ளிக்கல்வியில் 1,049 ஆசிரியர்களும், தொடக்கக்கல்வியில் 535 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 17 (ஆ) குற்ற குறிப்பாணை என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வரை பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு 17 (ஆ) குற்ற குறிப்பாணை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி, இன்று தொடக்கக்கல்வியில் பணிக்கு திரும்பாத 2,710 ஆசிரியர்களுக்கும் 17 (ஆ) குற்ற குறிப்பாணை அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல், பள்ளிக்கல்வியில் 500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கும் 17 (ஆ) குற்ற குறிப்பாணை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக