புதன், 20 பிப்ரவரி, 2019

ஸ்டாலின் அறிவிப்பு ... காங்கிரசுக்கு புதுவை உட்பட 10.. தொகுதிகள்.. விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Here is the list of constituencies that the Congress demands tamil.oneindia.com - lakshmi-priya.: சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அவை எந்தெந்த தொகுதி என்பது குறித்து திமுகவிடம் காங்கிரஸ் பட்டியலை கொடுத்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதே வேளை சென்னைக்கு வந்துள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாலர் முகுல் வாஸ்னிக் கிண்டியில் ஹோட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் கேட்டுள்ள 10 தொகுதிகள் இதுதான்:
1.கன்னியாகுமரி
2.நெல்லை
3.விருதுநகர்
4.தேனி
5.ராமநாதபுரம்
6.ஈரோடு
7.காஞ்சிபுரம்
8.சிவகங்கை
9.சேலம்
10.புதுச்சேரி
ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் புதுச்சேரி தொகுதியையும் இம்முறை கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக