புதன், 20 பிப்ரவரி, 2019

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் .. ராகுல் காந்தியுடன் கனிமொழி 3 மணி நேரம் ஆலோசனை.. .ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்


THE HINDU TAMIL : டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி நேற்று 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து திமுக கூட்டணியில் காங் கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற் றுள்ளன.
இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சும் நடக்கவில்லை. திரைமறைவில் அனைத்துக் கட்சிகளுடனும் திமுக பேசி வருகிறது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 3 நாள்களாக டெல்லி யில் பேச்சு நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செய லாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொரு ளாளர் அகமது படேல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி ஆகி யோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற னர்.
கடந்த 2009 மக்களவைத் தேர்த லில் ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகள் வேண் டும் என காங்கிரஸ் தரப்பில் கேட்கப் பட்டுள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்த திமுக, 2009-ம் ஆண்டு சூழல் இப்போது இல்லை. இப்போது அதிக கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது. எனவே, புதுச்சேரி உட்பட 9 தொகுதி கள் மட்டுமே தர முடியும் என தெரிவித் துள்ளது. திமுக கூட்டணிக்கு பாமக வந் தால் காங்கிரஸுக்கான தொகுதிகளில் 2 குறையும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக அணியில் பாமக இணைந்துவிட்டதால் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கனிமொழி நேற்று மாலை சந்தித்துப் பேசினார், அப்போது கடந்த 3 நாட்களாக நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித் துள்ளார். காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து அவர் கள் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தி னர். அகமது படேல், குலாம்நபி ஆசாத் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது ராகுல் காந்தி யுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். அப் போது காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக