வியாழன், 31 ஜனவரி, 2019

கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை.. போலீசின் அராஜகம் பற்றி விடியோவில் பதிவு


மாலைமலர் :ராமாபுரத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #calltaxidriversuicide கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை -
சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு சென்னை: சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற கால் டாக்சி டிரைவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்னர், போலீசார் தன்னை அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய நபர் குறித்தும் விசாரிக்க இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் ஓட்டுநர் ராஜேஷ் குற்றம் சாட்டிய போக்குவரத்து காவலர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தரவேண்டும். 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக