சனி, 19 ஜனவரி, 2019

சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா

குருகிராமம் சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பாதினத்தந்தி : கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், குருகிராமத்தில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்பி வரும்படி எடியூரப்பா அழைத்துள்ளார். பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பாஜகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பெங்களூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் பங்கேற்கவில்லை.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வரும் பாஜகவின் முயற்சிக்கு இணங்கக்கூடாது என கட்சி எம்எல்ஏக்களை கட்சியின் தலைவர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.



ஆனால் இந்த குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக