ஞாயிறு, 13 ஜனவரி, 2019

நீதிபதி செல்லமேஸ்வர் – என்ன செய்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்

செல்லமேஸ்வர்BBC :  படத்தின் காப்புரிமை PTI

 நீதிபதிகளை தேர்வு செய்கின்ற கொலிஜிய அமைப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே செல்லமேஸ்வர் கேள்விக்குட்படுத்தினார்.

இந்திய அரசு ஒழுங்காக செயல்படுகிறதா? அல்லது இந்திய உச்ச நீதிமன்றம் சரியான வேலைகளை செய்கிறதா? என்பது தனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ இல்லாத இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் அமைதியான வாழ்க்கை நடத்தி வருவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.



இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் நடந்திராத ஒரு சம்பவம் 2018ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்தது.
நீதிபதி செல்லமேஸ்வரும், மூன்று நீதிபதிகளும் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளுக்கு எதிரான முக்கிய கேள்விகளை செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பினர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் நீதிபதிகள், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோரோடு இப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் பங்கேற்றிருந்தார்.


செய்திளார் சந்திப்பு
உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக இத்தகைய வழியில் எதிர்ப்பை தெரிவிப்பது. இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாகும்.
உச்ச நீதிமன்ற பாரம்பரிய பார் கவுன்சிலால் ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொள்ளாமல் நேராக அவருடைய கிராமத்திற்கு சென்றபோது, ஓய்வுபெற்ற நீதிபதி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
இந்த சம்பவம் நிகழ்நது இன்று, சனிக்கிழமையோடு, ஓராண்டு நிறைவடையும் நிலையில், ஓய்வுபெற்ற செல்லமேஸ்வர் பிபிசிக்கு அளித்த பேட்டியை வழங்குகின்றோம்.
தன்னுடைய மூதாதையர்களின் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக செல்லமேஸ்வர் கூறுகிறார்.
“எனக்கு உணவு கிடைப்பது ஒரு பிரச்சனை இல்லை. விவசாயம் செய்கிறேன். எனது ஓய்வூதியத்தை அவர்கள் நிறுத்தினாலும், எனக்கு கவலையில்லை” என்று அவர் கூறினார்.


தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி
Image caption உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 மூத்த நீதிபதிகள்
தன்னை கலகக்காரன் என்று கூறுவதற்கு காரணமான தான் எழுப்பிய பிரச்சனைகள் எதுவும் மாறாமல் உள்ளதை நினைத்து கவலையடைவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தான் விரும்பும் தீர்ப்புகளைப் பெற முடியும் என்று வெளிப்படையாக கூறியதை செல்லமேஸ்வர் கேள்விக்கு உட்படுத்தினார்.


இலங்கை



இலங்கை
“மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதியப்படுகிறது. அடுத்த நாளே அவர் பிணை பெறுகிறார். ஆனால், சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பிணை பெற முடியவில்லை. நான் கலகக்காரன் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளேன். தேச துராகி என்றும் சிலர் என்னை அழைத்தார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நபரின் மீது சிபிஐ இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்று செல்லமேஸ்வர் சுட்டிக்காட்டுகிறார்.


இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராபடத்தின் காப்புரிமை NALSA.GOV.IN
Image caption தீபக் மிஸ்ரா
நீதிபதிகளை தேர்வு செய்கின்ற கொலிஜிய அமைப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதே செல்லமேஸ்வர் கேள்விக்குட்படுத்தினார்.
நீதிபதிகளை தேர்வு செய்வது வெளிப்படையாக நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை என்றில்லை. ஆனால், தவறானதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை. அதனைதான் நான் செய்தேன். இத்தகைய எல்லா பதவிகளுக்குமான பொறுப்புணர்வு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கான பதவிக்கு மட்டும் ஏன் அவ்வாறு இல்லை?” என்று கேள்வி எழுப்பினார் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர். நீங்கள் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று கேட்டபோது, மாணவர்களோடு தொடர்பு கொள்வதற்கு வாய்ப்புக்களை பெறுவதாக செல்லமேஸ்வர் தெரிவித்தார்.
சட்டத்துறை பல்கலைக்கழகங்களிலும், பிற பல்கலைக்கழகங்களிலும் அவர் அழைக்கப்படுகிறார். அங்கு பயிலும் மாணவர்களோடு அவர் வெளிப்படையாக உரையாடி வருகிறார். bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக